Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 16



 முன்றில் 16

இயல்வாணன்






மிஸ்டர் மலைவேம்பு பேசுகிறேன் இப்படியொரு பீடிகையுடன் சிறுகதையொன்று அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்திருந்ததுகதையின் தலைப்பு ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம்ரேபிள்கள்.  இதை எழுதியவர் அப்போது யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த  .பாலசுந்தரம்யூனியனில் நான் இடைநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்அந்தக் கதை அந்த வயதிலேயே என்னை ஆகர்சித்திருந்ததுஅந்த மலைவேம்பு யூனியன் கல்லூரி வாசலில் பெருவிருட்சமாய்   நிழல் பரப்பி நின்றது.

  80களின் நடுக்கூறில் - இனவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் - பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஏங்கும் பெற்றோரின் மனநிலையை மிகத் தத்ரூபமாக அக்கதை வெளிப்படுத்தியிருந்ததுபின்னர் அக்கதை உட்பட 10 சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு அந்நிய விருந்தாளி என்ற தலைப்பில் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்தபோது அதைத் தேடி வாங்கி ஏனைய கதைகளையும் படித்தேன்உயர உயரும் அன்ரனாக்கள்முட்டைப் பொரியலும் முழங்கையும்மூன்று பரப்பும் முக்கால் குழியும் என்று ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவையாக அமைந்திருந்தன.

1928ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று ஆவரங்காலில் பிறந்த கதிர் பாலசுந்தரம் தனது ஆரம்பக் கல்வியை மூன்றாம் வகுப்பு வரை  மதவாச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்,  ஆங்கில மொழி மூலக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியிலும் கற்றார்ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக் கொண்டார்.  இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில்(1939-1945) திருகோணமலை சீனன்வாடி வான்படைத் தளத்தில் பொறியியலாளர்கள் நெய்பர்கிளாக் ஆகியோரின் அலுவலகத்தில் பணியாற்றினார்பின்னர் அங்குள்ள கிளப்பன்பேக்கில் (கடற்படை முகாம்வெள்ளை அதிகாரி கில் என்பவரின் அலுவலகத்தில் பணியாற்றினார்யுத்த முடிவைத் தொடர்ந்து 1946இல் சொந்த ஊரான ஆவரங்காலுக்குத் திரும்பிய இவர் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி (சிரேஷ்ட இடைநிலை தராதரப் பத்திரம்பரீட்சையில் சித்தியடைந்தார்.

1950ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் 6 மாதங்கள் தற்காலிக பணியை ஆரம்பித்த இவர் பின்னர் இந்துபோட் நிர்வகித்த வவுனியா வடக்கிலுள்ள ஆயிலடி பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார்ஓராண்டிற்குள் மட்டக்களப்பு ஒலுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இடம்மாறினார்அங்கு ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார்தொடர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்(1958) புவியியல் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

1965இல் படிப்பு விடுமுறை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் படித்து கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்தொடர்ந்து கேகாலை ஹெம்மாந்தகம அல் அஸார் மகா வித்தியாலயம்நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். 1977இல் யூனியன் கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்அடுத்த ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தார்தொடர்ந்தும் அங்கேயே அதிபராகக் கடமையாற்றி 1987இல் ஓய்வு பெற்றார்இவரது காலத்தில் யூனியன் கல்லூரி புகழ் பூத்த பாடசாலையாக விளங்கியதுடன் .பொ..உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் நா.சுகந்தன் முதலிடத்தைப் பெற்ற வரலாற்றுச் சாதனை அக்காலத்தில் நிகழ்ந்தது.

ஒலுவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை இவர் எழுதிய சிறுகதையொன்று தினகரனில் வெளியானதுவானொலி நாடகமொன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதுதொடர்ந்து வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார்.  மேடைநாடகங்கள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார்.அமிர்தகங்கைசிரித்திரன்றோசாப்பூசிரித்திரன் ஆகியவற்றில் இவரது ஆரம்பகாலப் படைப்புகள் வெளிவந்தன.

இவரது சிறுகதைகள் அந்நிய விருந்தாளி(1986) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளதுகதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார்பெரும்பாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளனபாத்திரங்களின் உரையாடலோடு கதையை நகர்த்திச் செல்லும் பண்பும்பாத்திரங்களின் உணர்வோட்டத்தினூடாகக் கதை சொல்லும் பண்பும் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக உள்ளமையை அவதானிக்க முடிகிறதுபொதுவாக இக்கதைகள் முழுவதையும் தொகுத்து நோக்கும் போது பாலசுந்தரம் அவர்களால் ஈழத்துச் சிறுகதைத் துறையில் புதிய வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது

மறைவில் ஐந்து முகங்கள்(2004), வாரிசுகள்(2016), சிவப்பு நரிஅங்கத நாவல்(2004), கனடாவில் ஒரு சாவித்திரிவன்னி(2015) முதலான நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்ஆங்கிலத்தில் His Royal Highness, The Tamil Tigers(2011)> The Five Hidden Faces(2004)> The Militant’s Silence(2015), Blood and Terror ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

கல்வித்துறையில் தடம் பதித்த இவர் யூனியன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய கால அனுபவங்களை பொற்காலம் என்ற நூலில் தந்துள்ளார்அத்துடன் யூனியன் கல்லூரியின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை பல ஆதாரங்கள்ஆவணங்களுடன் தங்கத்தாரகை(2016) என்ற நூலாக எழுதியுள்ளார்அத்துடன் சிவதலம் என்ற தலைப்பில் ஆவரங்கால் கிராமத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய இவர் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பற்றிய பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்அவற்றில் அமிர்தலிங்கம் சகாப்தம்(2004), சாணக்கியன்கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு மலர்(2011), ஆவணம்பல்வேறு இயக்கங்களால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்தொண்டர்கள் கொல்லப்பட்ட ஆவணத் தொகுப்பு(2023),சத்தியங்களின்சாட்சியம்  முதலான நூல்களையும் பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

1950களில் பேரறிஞர் அண்ணாத்துரையின் வேலைக்காரி நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று நடித்ததுடன் வேறு பல நாடகங்களிலும் நடித்துள்ளார்பிரெஞ்சு நாடகமேதை மொல்லீரின் பறக்கும் டாக்டர் நாடகத்தை மொழிபெயர்த்து மேடையேற்றியுள்ளார்இவர் எழுதி மேடையேற்றிய சாம்பல் மேடுவிஞ்ஞானி என்ன கடவுளா?, விழிப்பு என்பன இவருக்குப் பெயர்தேடித் தந்த நாடகங்களாகும்.

இவ்வாறு கல்வித்துறையிலும்இலக்கியத்துறையிலும் தடம்பதித்த இவர் ஒரு காலத்தில் பிரபலமான ஆங்கில ஆசிரியராகவும் விளங்கினார்ஆங்கில இலக்கணத்தை தெளிவுறக் கற்பித்ததால் இவரது வீட்டில் நடைபெற்ற ஆங்கில வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவில் படையெடுத்துக் கற்றமையும் குறிப்பிடத்தக்கது.

95 வயதில் கனடாவில் வாழும் இப்பேரறிஞர் சகாப்தம் கண்டு தமிழுக்குச் சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

13-08-2023 உதயன் சஞ்சீவி


மதிப்பீட்டுரை

 கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய 30 கோவில் நூல்கள் 

இயல்வாணன்

தமிழிலக்கண அறிவும், பாரம்பரிய-மரபு சார்ந்த- இலக்கிய அறிவும், சமய அறிவும் கைவரப்பெற்றவர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள். இத்தகைய அறிவு கைவரப்பெற்ற பல பண்டிதர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் தமது மரபார்ந்த சிந்தனைக்குள் மட்டுப்படுத்தப் பட்டவர்களாக, அதற்கு மட்டுமே முன்னுரிமை தருபவர்களாக இருந்துள்ளனர். அவர்களால் பல மரபிலக்கியப் பனுவல்களைத் தர முடிந்துள்ளது.

இதற்கப்பால் இந்தப் புலமையோடு நவீன இலக்கியப் பரிச்சயமும், அதன் மீதான முனைப்பும் கொண்டு இலக்கியம் படைத்தவர்களும் உளர். பண்டிதர் க.சச்சிதானந்தன், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே), மதுரகவி இ.நாகராஜன், இ.முருகையன், வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்), மஹாகவி து.உருத்திரமூர்த்தி, கவிஞர் சோ.பத்மநாதன் என்று குறிப்பிடத்தக்க ஆளுமைகளை இவ்வாறு கண்டு கொள்ளலாம்.

அத்தகைய ஒருவராக, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெளிப்பாட்டைச் செய்த ஒருவராக பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தை நாம் அடையாளங் காண முடியும். ஒரு மரபுக் கவிஞராகவே அதிகம் அடையாளம் காணப்பட்ட பஞ்சாட்சரம் அவர்கள் பலநூறு மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், குறுங்கதை என உரைநடை இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

நாடறிந்த கவிஞராக கவியரங்க மேடைகள் பல கண்ட ச.வே. பஞ்சாட்சரம் ஈழத்தின் மூத்த கவிஞர்கள் நீலாவணன், மஹாகவி, முருகையன், அம்பி, திமிலைத்துமிலன் முதலான கவிஞர்களுடன் இணைந்து மேடையில் கவிதைகள் பாடியுள்ளார். இவரது தலைமையில் கவியரங்கில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தமை பேறே.

தண்டலை, எரிமலை தந்த விடுதலை, நாடும் வீடும், ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள், திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம், விலங்கு பறவை, பஞ்சாட்சரம் பாநாடகங்கள் ஆகிய நூல்கள் மூலம் இவரது கவிதை ஆற்றலை நாம் கண்டுணர முடியும். 3 பாகங்கள், 47 படலங்கள்,1300 பாடல்கள் கொண்ட பிரபாகரப் பெருங்காவியமும் இதிலொன்று. ஆயினும் வானலைகளில் தவழ்ந்த இக்காவியத்தின் பிரதிகள் இன்று இல்லாதமை இழப்பே.

இவரது சிறுகதைகள் வேள்வி நெருப்பு, சின்னஞ்சிறுகதைகள், அன்னை மண், இந்தத் தீபாவளி தேவைதானா? வண்டி முன்னாக மாடு பின்னாக, கொம்புத்தேன் ஆகிய  நூல்களாக வெளிவந்துள்ளன. கூலிக்கு வந்தவன் இவரெழுதிய நாவலாகும். சின்னப்பாப்பா பாட்டு என்ற சிறுவர் நூலையும் வெளியிட்டுள்ளார். இவரது இலக்கண நூலான இலக்கணப் பூங்கா பாடசாலை மாணவர்களுக்கு வரப்பிரசாதமான 15 பதிப்புகள் கண்ட துணை நூலாகும்.

இதற்கப்பால் நூறு வரையான பிரபந்தங்களை இவர் ஆக்கியுள்ளார். அவை ஆலயங்களாலும்இ அடியவர்களாலும் தனித்தனி நூல்களாக்கப்பட்டுள்ளன. பல வெம்போரில் வீழ்ந்து காணாமலும், அழிந்தும் போய்விட்டன. இருப்பவற்றுள் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் உள்ள ஆலயங்கள் மீது பாடப்பட்ட 30 பிரபந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறப்பு இணைப்பாக சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் திருப்பள்ளியெழுச்சி இடம்பெற்றுள்ளது.

இவற்றில் எட்டு திருவூஞ்சல்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஏழு ஆலயங்களுக்கும், ஒன்று பலாலி இராஜேஸ்வரி மனோன்மணி அம்பாளுக்கும் பாடப்பட்டுள்ளன. நான்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டு நான்மணிமாலை, இரண்டு மும்மணிக்கோவை, மூன்று திருவிரட்டை மணிமாலை, மூன்று சிந்து, இரண்டு பதிகம், சுன்னாகம் ஐயனாருக்கு அம்புலித்தூது, இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு வெண்பா, வன்னேரிக்குளம் ஐயனாருக்கு அருள்மங்கலம், அக்கராயன் சித்தி விநாயகருக்கு திருவடிபுகற்பா, கண்ணனுக்கு கவசம் என 31 பிரபந்தங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.

பிரபந்தங்கள் எனப்படுபவை காவியத்தன்மை இல்லாத இலக்கியமாகும் எனக் கூறுவர். இசையோடு பாடப்படுவது எனவும் கருத்துண்டு. நூலாசிரியர் சில பிரபந்தங்களைப் பாடுவதற்கு இறைவன் கனவில் தோன்றி பாட வைத்துள்ளதாக எழுதியிருக்கிறார். அது சாத்தியமானதே. நானும் திருவூஞ்சல், திருப்பள்ளியெழுச்சி, பதிகம் பாடியிருக்கிறேன். அது ஒரு இறையனுபவப் பரவசநிலையிலேயே சாத்தியமாயிருந்திருக்கிறது.

படைப்பாளிகள் காலத்தின் சாட்சிகள். காலத்தில் ஏற்படும் விளைவுகள் அவர்களைப் பாதிக்கும். நாயன்மார்களின் காலத்தில் இருந்து இன்றைய கவிஞர்கள் வரை காலத்தின் சாட்சியாக அவர்களது பாடல்கள் இருந்துள்ளன. நோயை நீக்கவும், வெவ்வினைகள் நீங்கவும், பஞ்சத்தில் இருந்து மீளவும் இறைவனை வேண்டிப் பாடிய பிரபந்தங்கள் பலவும் எம்மத்தியில் உள்ளன. கவிஞர் ச.வே.பஞ்சாட்சரமும் காலத்தை தனது பிரபந்தங்களில் பிரதிபலித்துள்ளார்.

பாம்பைக் கயிறாகப் பற்றிமலை ஏறுநராய்ச்

சாம்பவி தாம்தருக்கும் சொத்தெல்லாம் - தாம் விட்டுச்

செம்மணி வீதியிலே செத்தபிண மாய் நகர்ந்தார்

அம்மணியே! வாழ்விதுதானா? 

என்று 1995 மகா இடப்பெயர்வை முன்வைத்து நுணாவிற்குளம் கண்ணகை அம்மனிடம் இறைஞ்சுகிறார்.

இதே பிரபந்தத்தில் இன்னுமொரு இடத்தில் மிகநுட்பமாக இன்னொரு விடயத்தைப் பேசுகிறார்.

அன்னை செய்கையும் தந்தை செய்கையும்

அண்ணன் செய்கையும் தம்பி செய்கையும்

அந்நியன் அயல் பகைவன் செய்கையும்

அரசன் செய்கையும் அடிமை செய்கையும்

என்ன செய்கையும் எவரின் செய்கையும்

இன்னதேசரி என்று திட்டமாய் 

அன்னை நீநிற்கும் அகங்கள் ஏற்குமேல்

அவைகள் மட்டுமே அறங்கள் நல்லறம்

என்று இறைவியிடம் சொல்கிறார். இறைவியே! இதையெல்லாம் அறமாகப் பார்க்கிறாயா? என்று கேட்பது போலவும், எங்கள் செயல்களின் விளைவை நாங்கள் அனுபவிக்கும் பேறு கிடைத்ததா? என்று கேட்பது போலவும் நேரெதிரான அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் பொருள்கோடத் தக்கதாக இப்பாடலைப் கட்டமைத்துள்ளார்.

நுணாவிற்குளம் கண்ணகையம்மன் கோவிற்சூழல் எனக்குப் பரிச்சயமானது. எனது புகுந்தவிடம் அது. அந்தச் சூழலை, அதன் வனப்பை, இறைவியின் அருட்சிறப்பை நான்மணி மாலையாகத் தந்துள்ளார்.

“கொன்றை ஆல் கிஞ்ஞாக் குளிர்வனஞ் சூழ்ந்தொளிர் கண்ணகியே”

“கதிர்கள் அசையும் கழனி வரம்பில் வரிசைகளாய் 

மதர்களைக் கற்றை சுமந்துசெல் மாதர் மகிழ்ந்திசைக்கும்”

“மருதுநீ ழலில் வாய் குளத்தினில் 

மன்னி நீந்திடும் மங்கை மார்முகம்

கரிய நாகமாய் கூந்தல் கவ்விடும்

காட்சி கண்டயர் கந்த மைந்தனின்

அரிய அன்னையே!”  

என நுணாவிலின் எழிலைப் பல பாடல்களில் பாடியுள்ளார்.

இவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சிகளிலும் சூழல் விபரிப்பின் சிறப்பைக் காணலாம். மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளியெழுச்சியின் பாடலொன்று இவ்வாறுள்ளது.

பொய்கையில் தாமரை பூட்டுவாய் திறப்ப

போற்றியுன் நாமங்கள் புளகிக்க என்றே

மெய்குளிர் ஓடைநீர் வீழ்ந்தாடி மீண்டோம்

விழிமலர் திறந்த நின் விளங்கெழில் பருக

செய்வன புன்னகை தேன்பொழில் மலர்கள்

செல்லுவோம் சேருவோம் சிவன் கழல் என்றே.

வழக்கமான கற்பனைகளிலிருந்து விலகி சூழலின் விகசிப்பைத் தரிசிக்க வைக்கும் வகையில் இவரது திருப்பள்ளியெழுச்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னொரு திருப்பள்ளியெழுச்சி சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரருக்குப் பாடப்பட்டது.

சுவிற்சர்லாந்து பனிவிழும் தேசம். காலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெறும். குளிரைத் தாங்கும் ஆடை அணிகளுடனேயே நடமாடலாம். 

பாதையில் உறுமுவ பனிவழிப் பான்கள்

பகற்பணி யாளர்செல் உந்தொலி பம்மும்

காதுமெய் மூடிய கம்பளி ஆடைக்

கன்னியர் எம்பாவை பாடினர் தெருவில்

ஈதுநற் புலர்வென்றே இல்லங்கள் யன்னல்

எட்டியே பார்ப்பன வைகறை விளக்கும் 

பூதமை ஏந்தியே பூவையர் வந்தார்

புரங்கள் செற்றீர் பள்ளி எழுந்தருள்வீரே!

சுவிற்சர்லாந்தின் இயற்கை நிலைமையை உள்ளடக்கிய சூழல் விபரிப்பாக இத்திருப்பள்ளியெழுச்சி அமைந்திருப்பது முக்கியமானதாகும்.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் நான்மணி மாலையில் வரும் அகவற்பா தமிழர் தொன்மையை நினைந்து அன்றைய அவல வாழ்வைப் பேசுகிறது.

வாழி நீ அம்மா வயங்கருள் விளக்கே!

ஈழமண் தமிழன் அரசுகள் எத்தனை?

நல்லையில் வன்னியில் வல்லி புரத்தினில்

தம்பல காமத்தில் சால்கோண மலையினில்

எம்பழம் அரசுகள் இருந்ததை மறைத்து வெம்

செய்கையர் தமிழினச் சிதைப்பினில் முனைந்து

வெங்களம் படைத்தெமை விரட்டிடும் வேளையில்

அடைக்கலம் அளித்தெம் புரவலர் அணிக்கும்

துடித்துவந் தண்டிய சோரமில் தமிழர்க்கும்

விடுதலைத் தவத்துக்குந் திடவலு வேற்றிட 

என்றே ஈரைம் பானாண் டின்முன்

அன்றே இரணை மடுவாய் அமைந்தோய்

தொடர்ந்த யுத்தமும் இடம்பெயர்வுமான வாழ்வைப் பேசும் வன்னேரிக்குளம் ஐயனார் திருவூஞ்சலின் காப்புச் செய்யுள்  இவ்வாறு அமைகின்றது

வேரோடு பிடுங்குண்டோம் வீசப்பட்டோம்

வீடின்றி நாடெல்லாம் அலைய நாங்கள்

ஊரோடு தங்குகின்றீர் எனினும் நும்தம்

உண்மையருள் நம்முன்னே உலவிக் காக்கும்

சீராரும் இணுவை செகராசக் கோனே!

செழும்வன்னி வன்னேரிக் குளத்தில் வாழும்

காராளும் சாத்தன்மேல் ஊஞ்சல் பாடக்

காப்பருள்வீர் கவிதருவீர் கால்கள் போற்றி

இவரது காப்புச் செய்யுள்கள் எல்லாமே இணுவில் செகராசசேகரப் பிள்ளையாரை முன்வைத்தே பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவது முக்கியமானது. 

‘எம்மினத்தின் எதிர்காலம் ஈழத்திலே இடையூறு மயமாகவும் நிச்சயமற்றும் காணப்படும் நிலையிலும் நிகழ்காலத்தில் வாழும் மூத்த தலைமுறைப் பலர் அதுபற்றிக் கவலையே இல்லாமல் சுயவிளம்பரஇ தற்புகழ்ச்சிப் பல்லக்குகளில் ஏறிப் பவனி வருவதிலேயே முனைப்பாக அலைவதன் மூலம் தம் பிற்சந்ததிகளின் எதிர்காலத்தைப் பாலைவனமாக்குவதோடு அவர்கள் மனங்களுக்கும் அந்நியர் ஆகி விடுகின்றனர்.’

இதுதான் இன்றைய பொதுநிலைமை. காலச் சூழலை உள்ளார்ந்து நோக்காத நிலை எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிவிடும் என்பது உண்மையே. 

தங்கம்மா அப்பாக்குட்டி கூறுவது போல ‘அரசியல் கவிஞராகவும்இ ஆன்மீகக் கவிஞராகவும்இ புரட்சிக் கவிஞராகவும்’ ச.வே.பஞ்சாட்சரம் விளங்குகிறார். எனில் அவருடைய சமூகப் பொறுப்பு, சமூகம் மீதான அன்பு, அக்கறை,



சமூக நோக்கு என்பவையே அவரை இத்தகைய பாத்திரத்தை வகிக்க வைத்துள்ளன.





Wednesday, August 9, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 15



முன்றில் 15

இயல்வாணன்

எள்ளலும், சுவையும் மிக்க மண் மணம் கமழும் படைப்புகளால் அறியப்பட்டவர் எஸ்.எல்.எம்.ஹனீபா. இவர் எழுதிய கதைகளை விட இவரால் சொல்லப்படுகின்ற கதைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். திகட்டத் திகட்டச் சுவை கூட்டி அவர் சொல்லும் அழகே தனி. சு.வில்வரத்தினம் போல பாடவும் செய்வார். ஒவ்வொரு கணமும் உயிராற்றல் பீறிடும் இவரைப் போன்ற மனிதரை சமீப காலத்தில் நான் காணவில்லை என்பது இவர் தொடர்பிலான ஜெயமோகனின் பார்வை.

மட்டக்களப்பு மாவட்டம் மீராவோடையின் சட்டிபானை தெருவில் தம்பி சாய்பு சின்னலெவ்வையின் மூன்றாவது மகனாக 01-04-1946இல் எஸ்.எல்.எம்.ஹனீபா பிறந்தார். ஆற்றில் மீன் பிடித்து விற்கும் தொழில் புரிந்து வந்த இவரது தந்தையார் பின்னர் மூன்று கிராமங்களுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றினார்.

ஹனீபா தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஒட்டமாவடி முஸ்லீம் கலவன் பாடசாலையிலும் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாமிய சமயக் கல்வியைக் கற்றார். தொழிற் கல்வியை கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில்(1966-67) பெற்றார்.

தொடர்ந்து மலேரியா ஒழிப்புப் பிரிவில் மேற்பார்வையாளராக தொழிலுலகுக்குள் நுழைந்தார். சிறிது காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கால்நடை போதனாசிரியர் பணியினை ஆற்றினார். ஓராண்டின் பின்னர் 1969இல் விவசாய அபிவிருத்திப் போதனாசிரியர் நியமனம் கிடைத்து, கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெக்கிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலநறுவை, வெலிக்கந்த, திரிகோணமடு ஆகிய இடங்களில் கடமையாற்றி 1990இல் ஓய்வு பெற்றார். இவர் ஒரு குறுந்தூர ஓட்ட வீரராக அகில இலங்கை ரீதியில் விருதுகள் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கால்நடை சார்ந்தும், விவசாயம் சார்ந்தும் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர் அவ்வப்போது அது தொடர்பில் எழுதியும் வந்துள்ளார்.

இவர் ஒரு இலக்கியக்காரனாக மட்டுமன்றி அரசியல்வாதியாகவும் விளங்கினார். அந்த அரசியலே இலக்கியத்தில் பேராளுமையாக உருவாகாமல் அவரை முடக்கி விட்டது என்றால் மிகையல்ல. அதுபற்றி அவரே பிரஸ்தாபித்துள்ளார். இடதுசாரிய சிந்தனைகளில் ஈடுபாடு காட்டிய இவர் இடதுசாரிகள் கூட்டுச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குச் சார்பாக முதலில் மேடையேறினார். 1963இல் கல்குடா தொகுதி சுதந்திரக் கட்சிக் கிளையை உருவாக்கினார். 1969இல் அக்கரைப்பற்றில் எம்.எச்.எம்.அஷ்ரப்பைச் சந்தித்ததையடுத்து அவர் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. 1970இல்  அஷ்ரப் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். காங்கிரஸின் பிரசாரப் பீரங்கியானார்.

 1989இல் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மூன்று ஆரம்பப் பாடசாலைகளை உருவாக்கியமை உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தனது பிரதேசத்துக்குச் செயற்படுத்தினார். அக்காலத்தில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முகநூலில் இவர் பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு பொது நூலகம் இவரது ஆரம்பகால வாசிப்புக்குத் தீனி போட்டது.  இவரது முதற் சிறுகதையான நெஞ்சின் நினைவினிலே 1962இல் ராதா சஞ்சிகையில் வெளிவந்தது. இன்சான், இளம்பிறை, வீரகேசரி, சுதந்திரன், சுடர், சிந்தாமணி,கணையாழி,பூரணி,பாமிஸ், ராவய(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது) ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஐம்பது சிறுகதைகள் வரையே இவர் எழுதியுள்ளார்.

என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமையோடும் வறுமையோடும் வானம் பார்த்த பூமியை வைத்து மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்பார் நடத்துகின்ற அரசியல் புறோக்கர்கள், ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமே நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷீகத்தைத் தரிசிப்பதுதான் எனது எழுத்துப்பணி என எஸ்.எல்.எம்.ஹனீபா பிரகடனம் செய்வது போலவே அவரது எழுத்துகள் அமைந்துள்ளமை சொல்லத்தக்கதாகும்.


சமூகப்
பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்தூழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்து விடுகிறது என்று குறிப்பிடும் இவர் சன்மார்க்கம் கதை வெளிவந்த வேளை ஹனிபாட கையெ முறிச்சுப் போடணும் என்று சொம்பினார்களாம் என்று எழுதியிருக்கிறார்.

1992இல் இவரது 15 சிறுகதைகள் மக்கத்துச் சால்வை என்ற தலைப்பில் வெளியானது. இவரது மக்கத்துச் சால்வை சிறுகதையே இவரைப் பலரும் அறிய வைத்த கதை. கிராமத்தில் பெருநாள் காலத்தில் நிகழும் சிலம்பாட்டத்தை மையப்படுத்திய இக்கதை மனிதர்களின் கௌரவம், வெல்லும் ஆசை என்பவற்றுக்கு அப்பால் அன்பின் வலிமையை உள்ளார்ந்து பேசுகின்றது. இக்கதை இலங்கை அரசினர் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 11 பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோல மருமக்கள் தாயம், வேட்டை கதைகளும் பேசப்பட்ட கதைகளாகும்.

மக்கத்துச் சால்வையில் இடம்பெற்ற சில கதைகளையும் உள்ளடக்கி 24 சிறுகதைகள் அவளும் ஒரு பாற்கடல் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக 2007இல் வெளிவந்தது. மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் என்ற தலைப்பில் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறப்பு மலர் ஒன்று 2021இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் எம்..நுஃமான், தெளிவத்தை யோசப், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயமோகன், எம்.கே.முருகானந்தன், கருணாகரன் உள்ளிட்ட 56 பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இவரெழுதிய என்டெ சீவியத்திலிருந்து பாகம் 1 என்ற தலைப்பிலான பத்திகளின் தொகுப்பு இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அத்துடன் இவரது சிறந்த சிறுகதைகளான மக்கத்துச் சால்வை, மருமக்கள் தாயம் ஆகிய கதைகள் பேஜஸ் புத்தக நிலையத்தின் சிறுநூல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளது.

இவரது மக்கத்துச் சால்வை தொகுதிக்கு 1992இல் தமிழ்நாடு லில்லிதேவசிகாமணி விருதும், இலங்கை அரசின் சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. ஆளுநர் விருது(2000), கலாபூஷணம் விருது(2005), ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பேரவை விருது, மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை விருது என்பனவும் இவரது இலக்கிய சேவையைக் கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.

கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புத் தமிழுக்கு எஸ்.எல்.எம். தான் என்று எம்.கே.முருகானந்தன் குறிப்பிடுவது போல மட்டக்களப்பு முஸ்லீம் பிரதேச பேச்சுவழக்கினை இவரது கதைகளில் அலாதியாய் சுவைக்கலாம். இவரது கதைகளில் வரும் சொற்கள், சொலவடைகள் ஒரு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்குவதற்கான மூலமாகலாம்.

77வயதில் முதுமையின் தளர்ச்சியை இடையிடையே வெளிக்காட்டினாலும்  இளைஞனைப் போன்ற மனதுடன் இருக்கும் இவர் தனது அனுபவங்களை எழுத்தாக்கி ஈழத்து இலக்கியத்துக்கு புதிய ஒளி பாய்ச்ச வேண்டும்.

கவியரங்கக் கவிதை

 காலம் : 02-08-2023 பி.ப.3 மணி

இடம் : வலி.தெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (வலி.தெற்கு கலாசார பேரவை   கலைஞர் ஒன்றுகூடல்)

தலைமை : கவிஞர் த.ஜெயசீலன்

தலைப்பு : ‘காலப் பிழையோ அன்றிக் கடவுள் தரும் தண்டனையோ

        சாலப் பொருந்தி வந்து சா எமக்குத் தருகிறாயோ’

        வன்முறை




வேங்கட மலை முதல் வெண்ணுரைக் குமரியில் 

தீங்கெழில் செய்தமிழ் எந்தமிழே!

பூங்குழ லார்மொழி போலிள மென்மையும்

பொலிந்திடு நன்மொழி எந்தமிழே!

ஆங்கொரு பாரதி ஆர்த்திடு கவிதையில்

அருவியாய் பொழிந்ததும் எந்தமிழே!

தேங்கவி கம்பனும் வள்ளுவன் ஒளவையும்

திகட்டிடக் கவி தந்த எந்தமிழே!

நின்னைப் பணிந்தேன்


முந்துதமிழ் சந்தகவி தந்தஅழ காலே - எம்

முன்றிலுறை கின்றஎழில் ஜெயசீலத் தலைவ!

மந்தமரு தஞ்சேர்ந்த மணிக்கவிதைக் காரன்

மாண்புடைய கவித்தலைவ, வணக்கங்கள் என்றும்.

சுந்தரச் சொல்சேர்த்து சுற்றியுள்ள நிலைநோக்கி

மந்திரக் கவிசொல்லும் மதிப்புயர் கவிஞர்காள்!

வந்தமர்ந் தவையிலே தமிழ்ச் சுவை மாந்தும் எண்ணத்தில்

நந்தமிழ் நயங்கேட்கும் நல்ல சுவைஞர்காள்! வணக்கங்கள்


காலப்பிழையோ அன்றிக் கடவுள்தரும் தண்டனையோ

சாலப்பொருந்தி வந்து நீ சா எமக்குத் தருகிறாயோ?


கண்ட நேரமெல்லாம் செல்போனை நோண்டுகையில் 

மண்டை பிளந்தொருவன் மரித்திட்ட செய்தி வரும்

அண்டை வீட்டார் அடிபட்ட செய்தி வரும்

கொண்டை பிடித்திரு கோதையர்கள் வீதியிலே

சண்டையிடும் காட்சிகளை வலைத்தளங்கள் (நே) அலை காட்டும். 11

ஹொண்டாவில் குழுவாய் வந்து கொலைவாளைக் கையிலேந்தி

முண்டாசு கட்டி முகம் மறைத்து அடிதடி குத்துவெட்டு

சண்டாளர் செய்யும் சங்கதிகள் தினந்தினமும்.

பத்திரிகை ரிவியிலும் பதைபதைக்கும் செய்திகள்தாம்

கத்தை கத்தையாய் பணங் கொடுத்து ஆள்வைத்து – (கூலிக்கு) 11

சொத்துக்கள் சேதமிட்டு பெற்றோல் குண்டடித்து

நர்த்தனங்கள் புரிகின்ற நாடாச்சு நம்நாடு.

தத்துவஞானிகள் சிவபூமி என்ற மண்ணில்

குத்தும் கொலைவெறியும் கொண்டலையுங் கும்பல்களால்

சத்தியமாய் சாந்தி கெட்டு சவபூமியாகிறதே!

பக்திக்கு உரிய மண்ணில் பலிக்களங்கள் திறக்கிறதே!


கூட்டுக் குடும்பத்தில் கூடி வாழ்ந்தவர் நாம்.

வீட்டுக்குள்ளே விரிசலுக்குப் பொத்தலிட்டு – எவருக்கும்

கேட்டிடா வண்ணம் மூடி மறைத்தவர் நாம் - இன்றோ

கோட்டுப் படியேறி குடும்பத்துச் சங்கதியை – உலகம்

கேட்டிடச் சொல்கிறோம் கேடான செய்தியெல்லாம்.

வீட்டுக்குள்ளே வன்முறையின் சதிராட்டம்

கோட்டுச் சூட்டோடு குதூகலித்த மணப்பந்தல்

வாட்டமுற ; ஆயிரங்காலப் பயிர் சோர்ந்து மகிறது.


கல்லுவைத்த கோவிலெல்லாம் கைதொழுத எம்மவர்கள்

கல்லெறிஞ்சு கொல்லுகிற கலிகாலம் வந்ததையா!

பொல்லூன்றும் முதியவர்க்கு வலிந்துதவி செய்பவர்க்கு

கொல்லுகின்ற மனநிலையைக் கொடுவினையாய் கொடுத்தது யார்?

மல்லுக்குக் குழு சேர்த்து மனங்கவராப் பெயருமிட்டு

தில்லிருந்தால் வாவென்று தெருத்தெருவாய் அறைகூவும்

பொல்லாத வாலைகளின் துடுக்கடக்கப் போவது யார்?

வல்ல காவலர்க்கு வாள் குழுவைத் தெரியாதோ?


வன்முறையின் நதிமூலம் எங்கூற்றாய் தோன்றியது?

வாள் வில் சூலம் வேல் கொண்டெங்கள் கடவுளர்கள்

நன்முறைப் படுத்த வன்முறையைக் கைக்கொண்டார்.

நம்புராண இதிகாச வழியெல்லாம் வன்முறைதான்!

மன்னர்கள் வரலாற்று வழியெங்கும் இரத்தந்தான்!

பொன்பொருள் சூறையாடி பெண்கொண்டு முடிமன்னர்

தன்னாட்டை நிறுவிய சங்கதிதான் வரலாறாம்!

சங்கமெனும் பொற்காலம் சண்டைகளின் இழிகாலம்.


சேரனொடு சோழன் பாண்டியனும் (தமக்குள்) சண்டையிட்டு

பேர்கொண்டு கொடிநாட்டி வீரத்தை விளைத்தார்கள்.

போரால் வென்ற எங்கள் திராவிட மன்னரெல்லாம் - தனியாக

ஆரியத்தின் எழுச்சியிலே அனைத்தையும் இழந்து போனார். – பின்னர்

வீறாக எழுந்த சோதரர்கள் பிளவுண்டு

வாராது வரவிருந்த மாமணியைத் தொலைத்தோமே!

கூறாகிக் குழுவாகி குழுவுக்குள் கூறாகி

நார்நாராய் கிழிகின்றார் நம்தமிழின் தலைவர்கள்!


நம்முன்னால் முரசறையும் சினிமாவும் நாடகமும் 

வன்முறைக் காட்சிகளை மண்டைக்குள் திணிக்கிறது.

அம்மென்னு முன்னே அடிதடிக் காட்சிகளை 

நம்சினிமா காட்டி நம்மனதைச் சிதைக்கிறது.

கம்மென்றிருந்து கல்வி கற்க வேண்டியவர்

கம்புடனே குழுவாக அடிதடியில் இறங்குகிற

வன்முறைக் காட்சிகளை சினிமாவே தருகிறது.

நாயகனின் இலக்கணமே வன்முறைதான் என்கிறது.


பாடம் புகட்டும் ஆசிரியர் கம்பெடுத்து

ஆடுகின்ற சன்னதமும் அணிசேர்ந்து கொள்கிறது.

பாடம் படித்தவர்கள் (அதேவழியில்) பாடம் எடுக்கிறார்கள்.

பார்த்து நாம் வாய் மூடி பதைபதைத்து நிற்கின்றோம்.

கேட்க ஒருவரில்லை; கிளர்ந்தெழுந்து இதற்கு ஒரு 

காட்டமாய் முடிவெடுக்கும் கவனமும் யார்க்குமில்லை.

வாட்டும் துன்பம் போக்கி வளமானசமு தாயத்தை

தேட்டமாக்கும் தலைப்பிறை தெரியவில்லை எம்வானில்.


இப்படியே இருந்து நாம் இறந்தழிந்து போவதுவோ?

செப்படி வித்தையென்று சொல்லிக் கடந்து போவதுவோ?

தப்பென்றுரைத் தவர்க்கு தகுந்தவழி காட்டி நல்ல

பக்குவ வாழ்வுக்குப் பதப்படுத்த முனைவோர் யார்?

துப்பாக்கி வேண்டாம் சுடுகுழல்கள் இனி வேண்டாம்

தப்பாக யாரும் பிறப்பதில்லை மண்மீது.

பக்குவமாய் எடுத்துரைக்கும் பாங்கான வழி காண்போம்

முப்போதும் அவர் வாழ முறையான வழி சமைப்போம்.


கல்வியில் இருந்து கலை(க்)கின்ற பிள்ளைகளே

நல்வழி கெட்டு நடுத்தெருவில் நிற்கின்றார்.

பல்லோராய் கூடி போதையினை மாந்தி நாளும்

அல்வழியில் சென்று அடித களவு செய்தார். – அவரை

நல்விதமாய் மாற்றுகின்ற நலமான கல்வி வேண்டும்.

நன்மனத்தோர் ஆசுநீக்கி அவரையாண்டு கொள்ள வேண்டும்.

பொல்லாத விதியாக தமிழ்ச்சாதி அல்லலுறும்

வல்வினை நீங்கி நல்லோரை பிறக்க வேண்டும்.


ஆற்றலாம் இளைஞர்க்கு அளித்து நல்ல பயிற்சியினால்

மாற்றத்தைக் காண மனப்புரட்சி செய்ய வேண்டும்.

தோற்றுத் துவண்டு விரக்தி மனச்சோர்வு 

ஊற்றெழா வண்ணம் (அவர்) உளத்தைக் காக்க வேணும்.

நாற்ற மெடுக்கும் போதை மது புகையொழித்து

தோற்றும் புதுச் சமுதாயம் திரண்டெழுந்து வரவேண்டும்.

ஆற்றலாம் இளைஞர்சக்தி வளமானால் எம்நாடு

ஏற்றமுறும் : எழுந்துயர்ந்து முன்னேறும்.