Saturday, October 8, 2011

இயல்வாணன் சிறுவர் பாடல்கள்

கணனி
சின்னஞ் சிறிய பெட்டிக்குள்ளே
பென்னம் பெரிய மூளை!
சின்னஞ் சிறிய பெட்டியதற்கு
கணனி என்று பெயராம்!

விசைப் பலகை சுட்டியும்
விரிதிரையும் மையமும்
இணைந்து ஒன்றாய் கணனியாம்
இணையில்லாத கருவியாம்!

பாட்டும் கதையும் கூறிடும்
படமும் வரைந்து காட்டிடும்
கேட்ட கணக்கும் தீர்த்திடும்
சேர்ந்து விளை யாடிடும்

சுட்டி கையில் பற்றியே
விசைப்பலகை தட்டுவோம்!
மட்டில்லாத மகிழ்வுடன்
கணனியோடு கூடுவோம்!
இயல்வாணன்

துவிச்சக்கர வண்டி

காலால் மிதிக்க ஓடும் வண்டி
காற்றை வலித்துப் போகும் வண்டி
ஆளாள் ஏற்றிச் செல்லும் வண்டி
அழகாய்ப் பயணம் செல்லும் வண்டி

பாரம் பலவும் சுமந் திடலாம்
பாதை எதிலும் சென் றிடலாம்
தூரம் குறுக்கி உள் வழியே
துணிவாயப் பயணம் செய் திடலாம்

எரிபொருளே தேவை யில்லை
எவரும் வாங்கும் எளிய விலை
நன்மை யதே நாளுஞ் செய்யும்
நச்சுப் புகை இதற்கு இல்லை.

இயல்வாணன்

காற்று

ஆடும் ஓடும் சுழன்றிடும்
அகப் பட்டதைத் தூக்கிடும்
பாடும் கூடும் தேடிடும்
பாரில் எங்கும் சென்றிடும்

இலையை மரத்தை அசைத்திடும்
இன்பந் தனை ஊட்டிடும்
வளியின் அசையும் வடிவமாம்
வண்ண முகிலை ஓட்டுமாம்

வாடை கச்சான் சோழகம்
வகை வகையாய்க் காற்றுக்கள்
தேடிக் காற்று வாங்குவோம்!
தெம்மாங்குதான் பாடுவோம்!

இயல்வாணன்

நிலவும் இரவும்

வானில் நிலவு எறிக்குது
வாகாய்க் கண்ணைப் பறிக்குது
வாடைக் காற்று வீசுது
வாசங் கொண்டு வீசுது

தென்னை மரமும் ஆடுது
சேர்ந்து ஓலை ஆடுது
வண்ண மரக் கிளைகளும்
நிலவில் ஒளிர்ந்து ஆடுது

தவளை த்தி நடக்குது
தாவி வெளவால் பறக்குது
அலறி ஆந்தை முறுக்குது
அரவம் கூடக் கொறிக்குது.

வீட்டு முன்றில் நின்றுமே
விரும்பி இதனைப் பார்ப்போம்
ஏட்டில் சொல்லிடா அழகது!
இன்பம் நிறைந்த பொழுதது!

இயல்வாணன்

ஆற்றங்கரைக் காட்சி

வாருங்கள் வாருங்கள் தோழியரே!
வண்ணக் குடந்தனைத் தூக்கிக் கொண்டு.
கூடுங்கள் பாடுங்கள் ஆடுங்கடி!
கும்மி கொட்டிக் கொண்டு சென்றிடுவோம்.

தோற்றும் கீழைவான் சூரியனார்
சுடரும் அழகதைப் பாருங்கடி!
ஆற்றில் சலசலத் தோடும் நீரில்
அணிவகுத்துச் செல்லும் மீன்கள் பாரீர்!

தூண்டில் கட்டியொரு மீனவனும்
தூய வெள்ளை நிறக் கொக்குகளும்
வேண்டும் வரங் கேட்டு நீரின்மீது
விரதமிருப்பதைப் பாருங்கடி!

மூழ்கியெழுந்து நீராடிடுவோம்!
முழுதும் உடைகளைத் துவைத்திடுவோம்!
மொண்டு குடந்தனை நிரப்பிடுவோம்!
மோதும் அலையெனத் திரும்பிடுவோம்!

இயல்வாணன்

சின்னப் பாப்பா

தத்தித் தத்தி நடந்து வரும் சின்னப் பாப்பா உந்தன்
புத்திக்குள்ளே ஒளிந்திருப்பது என்ன பாப்பா
முத்து முத்துப் பல் வரிசைச் சின்னப் பாப்பா
உந்தன்
முறுவலிலே மறைந்திருப்பது என்ன பாப்பா

கண்சிமிட்டி விழியுருட்டிக் காட்சி தருவாய்!
கையிரண்டும் தாளமிட ஆட்ட மிடுவாய்!
கண்டபடி வாய் பிதற்றிப் பாட்டுந் தருவாய்! எந்தன்
கனிமொழியே! யாவரதும் உள்ளம் நிறைவாய்!

கட்டிப் பிடித்தொரு போது முத்தமிடுவாய்!
கடிதெனவே மறுபோது கதறியழுவாய்!
வெட்டி வரும் மின்னலைப் போல் மாறிமறையும் உந்தன்
வெடிச்சிரிப்பும் அழுகையதும் சொல்வது என்ன?

இயல்வாணன்

எந்தமிழ்

வேங்கட மலை முதல் வெண்ணுரைக் குமரியில்
தீங்கெழில் செய்தமிழ் எந்தழிழே!
பூங்குழலார் மொழி போலிள மென்மையும்
பொலிந்திடு நன்மொழி எந்தமிழே!
ஆங்கொரு பாரதி ஆர்த்திடு கவிதையில்
அருவியாய்ப் பொழிந்ததும் எந்தமிழே!
தேங்கவி கம்பனும் வள்ளுவன் ஒளவையும்
திகட்டிடக் கவிதந்த தென் தமிழே!

அப்பா
அப்பா நல்ல அப்பா
அருமை யான அப்பா
எப்போதெனினும் எமக்கு
ஏற்ற யாவும் தருவார்

தப்பாய் எதுவும் செய்தால்
தண்டித் தெம்மை வளர்ப்பார்
முப்போ துணவு தரவே
முயன்று உழைத்து வருவார்

தந்தை சொல்லை மதிப்போம்
தரணியில் முந்தி வாழ்வோம்
எந்தை எமக்கு உயிராம்
எம்மில் அவரும் உயிராம்

இயல்வாணன்

Monday, August 8, 2011

யாரொடுநோவோம்?

01 
 செயல் திறன் அரங்க இயக்கம் 'பஞ்சவர்ண நரியார்" என்ற சிறுவர் அரங்கிற்கான நாடகத்தைப் பாடசாலைகள் தோறும் அளிக்கை செய்து வருகின்றது. 'வளரும் பயிருக்கு முளையிலே உதவுவோம்" என்ற முயல்வே இந்நாடகமாகும். சிறுவர்களின் உளத் தேவைகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதில் சிறுவர் அரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சிகரமான கற்பித்தல் நுட்பமாகவும் அரங்கு பயன்படுகிறது. மாணவிடத்து கற்பனையாற்றலை வளர்ப்பதிலும் பிரச்சினைகளை உள்வாங்கி விவாதித்து குழுக்களாக ஆலோசனை கலந்து ஏனையவர் கருத்துக்களை ஏற்றும் மறுத்தும் தீர்வை நோக்கி நகர்வதிலும் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்துவதிலும் 'சிறுவர் அரங்கு" காத்திரமான பங்களிப்பை வழங்குகிறது. இதனால் தான் உளவியலாளர்களும் கல்வியாளர்களும் 'கற்றலில்" அரங்கினைப் பிரயோகிக்கும் தேவையை வலியுறுத்தியுள்ளனர். இந்த நாடகத்தைப் பலரும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். சில இடங்களில் நாடகத்துக்கு அதிபர், ஆசிரியர் தரப்பு ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆசிரிய ஆலோசகர் ஒருவரிடம் ''இந்நாடகத்தைப் பார்க்கவில்லையா?"" எனக் கேட்டேன். ''நான் .துகளைப் பார்க்கிறதில்லை"" என்றார். ''இந்திய நாடகங்களைப் போலை வருமே? சண் ரீவி, சக்தி ரீவியிலை வாற தொடர் நாடகங்கள் என்ன மாதிரிச் செய்யுறாங்கள். அந்த ஸ்ரான்டட்டுக்கு இதுகள் என்ன நாடகமே"" என்று தொடர்ந்து கூறினார். எனக்குத் தலை சுற்றாதது ஆச்சரியமே. இந்திய மெகாசீரியல்களின் தாக்கம் எவ்வாறானது என்பதற்கு இதுவோன்றே போதும். அவரது 'இரசிப்பு" என்பது சுதந்திரம். ஆனால் சிறுவர் அரங்கிற்கான நாடகத்தை நிராகரிக்கும் அவர் சேவைக்கால ஆலோசகராக வகுப்புக்களை மேற்பார்வை செய்வது வேடிக்கையானது. அண்மையில் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கலை இலக்கியம் தொடர்பான அறிவோ இரசிக மனோபாவமோ மாணவரிடம் மட்டுமல்ல ஆசிரியர்களிடமும் இல்லை. எனவே ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டுமென மூத்த படைப்பாளி 'நந்தி" கோரினார். உண்மையில் இப்பட்டறைகள் கல்வி அதிகாரிகள் மட்டத்திலிருந்து கீழிறங்க வேண்டும் போலுள்ளது. எனினும் இதற்குள் அவரவர் தனிப்பட்ட மனோபாவமும் ஆர்வமும் தங்கியுள்ளதென்பதும் மறுக்க முடியாதது. - ஏகலைவன் 
 02 
 தமிழ்த்தினப் போட்டிகள் தற்போது பாடசாலைகளிலும், கோட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. பாடசாலை மட்டத்தில் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், உரிய பயிற்சிகளை வழங்குவதற்கும் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக அதிபர் ஒருவர் சொன்னார். ஆசிரியர்களும் தங்களது கணிப்பீட்டுப்பதிவுகளை ஒழுங்காகப் பேணுவதைவிடுத்து இத்தகைய பணிகளில் ஈடுபடுவதற்குப் பின் நிற்கிறார்கள். பெற்றோர் சிலரும் கூட பாடத்துக்கு அப்பால் சென்று படிப்பைக் கெடுக்கும் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றுவதிலிருந்து தம் பிள்ளைகளை விலக்கி வைக்கவே விரும்புகின்றனர். ஆக, சரியான தேர்வின்மை, போதிய பயிற்சியின்மை, பாடசாலை நேரத்துக்குப் புறம்பாக ரீயூசனை இடைநிறுத்திப் பயிற்சிகளில் கலந்துகொள்ள மாணவர்கள் (சில ஆசிரியர்களும்) தயாரில்லாமை போன்ற காரணங்களால் போட்டி நிகழ்ச்சிகளில் தரமின்மை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு கல்விக் கோட்டத்தால் நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் இலக்கிய நயம் கூறும் பாடல் பிழையானதாக வழங்கப் பட்டிருந்தது. பாடநூலிலும் இடம்பெற்றுள்ள புரட்சிக்கவிஞரின் மேற்படி பாடலிலுள்ள பிழையை போட்டிக்காகத் தெரிவு செய்து எழுதியவர்களோ, நயம் எழுதிய மாணவர்களோ, அவற்றை மதிப்பீடு செய்த நடுவர்களோ கண்டுகொள்ளவில்லை. அதேபோல, சிறுகதை ஆக்கம் என்ற பெயரில் கதைகளும் கட்டுரைகளுமே பெரும்பாலும் எழுதப்பட்டிருந்தன. பலரது கதைகள் தமிழக மெகா சீரியல்களின் பிரதிபலிப்புக்கள். இவற்றை மதிப்பீடு செய்பவர்களின் இலக்கியத் தரத்தையும் கூட உயர்த்துணரக்கூடிய வகையிலேயே மதிப்பீடுகளும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய புலமையை இனங்காண்பதிலுள்ள தவறே இத்தகைய போட்டிகளில் தகுதியற்ற நடுவர்களின் தேர்வுக்கு வழி செய்கிறது. அதிகாரிகள் வால் பிடிக்கும் கங்கரியங்கள் கைவந்தவர்களே புலமையாளர்களாயும், தமிழ் வல்லாளர்களாயும் மாறி விடுகின்றனர். தமிழ்த்தினப் போட்டிகள் தேர்வு தொடர்பாகப் பாடசாலைகளுக்கிடையில் பாரபட்சங்கள் நேர்வதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய குளறுபடிகளுக்கெல்லாம் ததியான நடுவர்கள் இல்லாமையே காரணமாகும்.
 03
 அரச உத்தியோகம் பார்க்கும் இரு நண்பர்கள் சந்தித்தனர். ''என்னடா இப்படி இளைச்சுப் போனாய்?"" என்று வினவினார் ஒருவர். ''அது பெரிய சோகக்கதை. அதைவிடு, நீ எப்படி?"" என்றார் மற்றவர். என்னடாப்பா... குடும்பச் சண்டையே?"" ''சேச்சே... நானும் மனிசியும் சந்திச்சால்தானே சண்டை வரும்"" ''அப்பமனிசி வேறெங்கோ போய்விட்டாவா?"" ''இல்லையடாப்பா. என்ரை மகனுக்குப் பத்து வயது அதுதான் பிரச்சினை" விளங்கேல்லையடா" ''மகன் ஸ்கொலஷிப் வகுப்பிலை படிக்கிறான். மனிசி விடியத் தொடங்கி இரவு பதினொரு மணி வரைக்கும் அவனோடையே மாயுறா. கடைச்சாப்பாடு. ரீயூசனுக்கு பள்ளிக்கூட விசேட வகுப்புக்கும் கூட்டிக்கொண்டு திரியிறது, ஏழெட்டுப் பயிற்சிப் புத்தகங்களை வாங்கிச் செய்யிறது எண்டு 'அது" திரியிற பறப்பிலை வீடென்ன வாசலென்ன... கணவனென்ன... குடும்பமென்ன..." என்று சலித்துக் கொண்டார் அவர். இன்றைய நடுத்தர வர்க்கத்தின் 'அந்தஸ்தை" நிர்ணயிக்கும் ஒரு கருவியாகப் புலமைப்பரிசில் பரீட்சை மாறிவிட்டது. பிள்ளைகளின் மகிழ்ச்சியையும், உளத் தேவைகளையும் புறந்தள்ளி, அவர்களை இயந்திரத்தனமாகவும், சட்டகத்தனமாகவும் நகர்த்தி, தம்பிள்ளைகளும் 'ஸ்கொலர் என்று சொல்லிப் பெருமை கொள்வதில் இந்தப் பெற்றோர்களுக்கு ஆனந்தம்.. அதற்கு 'அனுமதி" என்ற கயிற்றுடன் பிரபல பாடசாலைகள் காத்திருக்கின்றன. பல பாடசாலைகளின் நிர்வாகங்கள் தமது 'இருப்பை" புலமைப்பரிசில் வெற்றியினூடாகவே நிலைநிறுத்தப் பிரயத்தனப்படுகின்றன என்பதனையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிறார் உளவியல் தொடர்பான எந்தவித அறிவுமற்ற பல தனியார்களின் 'வெற்றிகரமான" தொழிலாகவும் புலமைப்பரிசில் பயிற்சி வகுப்புகளும், பயிற்சிப் பரீட்சைகளும் அமைந்துள்ளன. ஒரு மாணவனின் 'வெற்றி"யில் குளிர்காய்வோர் பலர். பெற்றோர், பாடசாலைகள், பயிற்சி வினாத்தாள் வெளியிடுவோர், தனியார் ஆசிரியர்கள் எனப் பலருமே 'பிள்ளை"யின் வெற்றிக்கு 'உரிமை" கோருகின்றார்கள். ஆக, பிள்ளையின் 'ஆளுமை" என்பது மறுதலிக்கப் படுகின்றது. 'தோல்வியைத் தழுவும் மாணவர்களின் நிலையோ பரிதாபம். அவர்கள் குடும்பத்தினதும், சமூகத்தினதும் 'தீண்டத்தகாத பிரிவினராக" சில காலத்துக்குக் கருதப்படுவார்கள். வசையும், இம்சையுமாய் அவர்கள் பொது நகரமாய்க் கழியும். எங்க@ரில் இந்த பிள்ளைகள் புலமைப் பரிசிலிருக்கத் தோற்றினார்கள். இருவருமே பரீட்சைகயில் சித்தி பெற்றனர். ஒரு பிள்ளை 140 புள்ளியும், மற்றப் பிள்ளை 128 புள்ளியும் எடுத்தனர். 128 புள்ளி எடுத்த பிள்ளை அதன் தாயாரால் 'வையப்பட்ட" முறையைப் பார்த்த போது, தாங்க முடியவில்லை. உண்மையில் பிள்ளைகளிடத்திலும், சமூகத்திலும் ஏற்றத்தாழ்வை உருவாக்கக் காரணமான 'புலமைப்பரிசில் பரீட்சை" தொடர்பாக கல்வியியலாளர்கள் கவனம் செலுத்தாதிருப்தது கவலைக்குரியதே. 
 04 
 அண்மைக்காலங்களில் கோயில் விக்கிரகங்கள், வாகனங்கள், தேர்ச்சிற்பங்கள் முதலானவை களவாடப்பட்ட சம்பவங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன, தேவாலயங்களின் திருச்சொரூபங்களும் கூட இவ்வாறு களவாடப்பட்டன. சாதாரணமாக வீடுகளை, கடைகளை உடைப்பது போல ஆலயங்களையும், தேவாலயங்களையும் உடைத்து அங்குள்ள பெறுமதி வாய்ந்த பொருள்களையும் பணத்தையும் திருடிச் செல்வது நடந்து வந்துள்ளது. இங்கு திருடப்படும் பணமும் பொருள்களும் அன்றாடப் பாவனைக்கு உகந்தவை. தமக்கேற்படும் பணத்தேவைக்காகத் திருடர்களால் கவரப்படுபவை. இந்தத் திருட்டுக்களை நியாயப்படுத்த முடியாவிடினும், திருட்டுப் பொருள்களனதும், பணத்தினதும் இழப்பு நீண்ட கால நோக்கில் ஈடுசெய்யப்படக் கூடியன. ஆனால், இப்போது சுவாமியின் வெண்கல மற்றும் கருங்கல் சிலைகள், தூப தீபங்கள், திருவாசிகள், தேர்ச்சிற்பங்கள், மணிகள், வாகனங்கள், சொரூபங்கள் போன்ற திருடப்படுகின்றன. சில ஆலயங்கள் முற்றாக உடைக்கப்பட்டுத் திருட்டு இடம்பெற்ற போதும் ஏனைய பொருள்கள் திருடப்படவில்லை. திருடப்படும் பொருள்கள் நமது பாரம்பரிய கலைப் பொருள்கள். இவை நமது பொக்கிஷங்கள். நமது தொன்மை வாழ்வின் - வரலாற்றின் - குறியீடுகள். பிரித்தானிய மக்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுபவர்கள் 'கடற்கலையில் கிடக்கும் அழகு மிக்க மணிகளையும் முத்துக்களையும் அவர்கள் அப்படியே வைத்து அழகு பார்க்க விரும்புவார்களேயன்றி, அவற்றை அழித்து மாலையாக்கத் துணி மாட்டார்கள்" என்பது பிரித்தானியா தொடர்பான ஒரு கூற்று. அண்மையில் லண்டனிலிருந்து நண்பரொருவர் வந்திருந்தார். அவர் இங்கு வந்து ஒரு வரலாற்று நூலைத் தேடினார். அவரால் எங்கும் பெற முடியவில்லை. இறுதியில் அவரது நண்பர் ஒருவர் இணையத் தளத்துக்கூடாகத் தேடி, பிரித்தானிய நூலகமொன்றில் அந்நூலைப் பெற உதவினார். எமது வரலாற்று நூல்கள் இங்கில்லை. லண்டனில் உள்ளது. வெட்கக்கேடான யதார்த்தம் இதுதான். கந்தரோடையில் கண்nடுத்த 'வரலாற்றுச்சான்றுகள் இங்கில்லை. அதைச் சேகரித்த பொன்னம்பலம் ஆசிரியர் பேணணன் அபயசேகர (முன்னாள் அரச அதிபர்) மூலமாக தென்னிலங்கைக்கு அனுப்பினார். இன்று அவை வரலாற்றுத் திரிபக்குப் பயன்படுகின்றன. நல்லூர் இராசதானியின் எச்சங்கள் (அவை ஒல்லாந்தர் காலத்துக்குரியன என்ற கருத்துமுண்டு) கூடக் கவனிக்கப்படவில்லை. 'மந்திரிமனை" கவனிப்பாரின்றி மது அருந்துபவர்களின் கூடாரமாக உள்ளது. யமுனா ஏரி கூட எந்தக் கவனிப்பும் இன்றிக்கிடக்கிறது. இன்றுள்ள 'சாமாதான" சூழலில் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களாக இவற்றை உருவாக்க 'மாநகரசபை" நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யாழ்ப்பாணம் கோட்டை அரசியல் இராணுவ தந்திரோபாய ரீதியில் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனூல், அதன் எச்சங்களையாவது புத்துருவாக்கி, ஒரு வரலாற்றுப் பெருமை மிகு இடமாக அதனை மாற்ற வேண்டும். எமது பாரம்பரிய கலைப் பொருள்கள் தென்னிலங்கையில் நல்ல விலை போகின்றன. வெளிநாட்டவர்கள் கைது பலரும் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அதற்காகவே இவை இங் திருடப்படுகின்றன. விமான மூலமும், A-9 பாதை வழியாகவும் அவை கடத்தப்படுகின்றன. ஒரு தொகுதி விக்கிரகக் கடத்தலுடன் தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்ட போது இந்த 'உண்மை"கள் வெளிவந்துள்ளன. இத்தகைய கடத்தலுக்கு எதிராக இந்துமத நிறுவனங்கள் எதுவுமோ, சமயப் பெரியார்கள் எவருமோ குரல் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஒன்றிணைந்து ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது விசனிக்கத்தக்கது. யாழ். பலக்கலைக்கழக நுண்கலைத்துறை, விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியன கூட 'அறிக்கை"களோடு முடங்கி விட்டன. எனவேதான், இத்திருட்டுக்களும் தொடர்கின்றன போலும். 
 05 
மனிதனுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசையே என்பது ஆண்மீக வாதிகளின் கருத்து. மனிதனுடைய ஆசைகளே, அதன் வழியான தேவைகளே பொருளுற்பத்தியைத் தூண்டுகின்றன என்பது பொருளியலாளர்களின் கருத்து. தம்முடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்பதே பெற்றோர்களின் ஆசை. சான்றோன் எனக் கேட்பதே தாயின் ஆசை. அவயத்து முந்தியிருக்கச் செய்வதே தந்தையின் கடன் என்கிறார் வள்ளுவர். இன்றைக்கு எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் மனநிறைவுகொள்ளும் மனநிலையில் இல்லை. அவர்கள் கற்பது போதாதென்ற அங்கலாய்ப்பே பெற்றோரைச் சூழ்ந்து நிற்கிறது. போட்டி மிகுந்த சூழலில் பாடவிதான கற்கைகள், கணனி அறிவு, ஆங்கிலம் என்ற வகையிலேயே பிள்ளைகள் இயக்கப்படுகிறார்கள். பாடக்குறிப்புகளும், கற்கை வழிகாட்டல்களும், வினாவிடைத் தொகுப்புக்களுமே அவர்களிடம் திணிக்கப்படுகின்றன. பத்திரிகைள், சஞ்சிகைகளை வாசிக்கவோ, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழவோ, சுற்றுலாக்களுக்குச் செல்லவோ அவர்களுக்கு 'வாய்ப்பு" வழங்கப்படுவதில்லை. நண்பர்கள் 'சகவாசத்தை" அவர்கள் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில், அதுவே அவர்களின் திசையை மாற்றி, போராட்டம், விடுதலை என்று அழைத்துச் சென்று விடும் என்பது பெற்றோரின் அச்சம். இந்நிலைமையில், க.பொ.த.சாதாரண தரம் வரை அமைதியாக நகரும் மாணவர்கள், பின்னர் பெற்றோர்களிடம் தமக்குள்ள 'பேரம் பேசும் வலுவை" காட்டி விடுகிறார்கள். எனவே, வீடுகளில் டிஷ் அனரனாக்களும், சீடி பிளேயர்களும், கைத்தொலைபேசிகளும், புதிய மொடல் மோட்டார் சைக்கிள்களும் விக்கின்றன. பணக்கார நண்பர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். படம் பார்க்கவும், கடற்கரைக்குச் செல்லவும், மது அருந்தவும் செய்கிறார்கள். தாம் ஒரு குழுவாகின்றனர். எதிரெதிர்க் குழுக்களாய் மோhல்களில் இறங்குகின்றனர். ''நாங்கள் எந்த 'குறூப்" எண்டு தெரியுமோ? கவனமாய் இருங்கோ"" என எச்சரிக்கை விடுகின்றனர். வாள்கள், சைக்கிள் செயின்கள் தாங்கிய குறும் போர் வீரர்களாய் அவர்கள் 'பல்வர்", 'சீபீஸற்" புரவிகளில் பயணம் வருகின்றனர். 'ஹெல்மற்" இன்றி மூன்று பேர் ஒரு வாகனத்தில் பயணிக்க பொலீஸார் தலையாட்டிச் செல்லும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். 'லைசென்ஸ்" தேவையில்லை, நூறு ரூபா 'பொலீஸாருக்கு என்கிறான் இளைஞனொருவன். பொலீஸார் பெறும் 'கையூட்டே" இவ்வாறானவர்களின் 'தலை தெறித்த" மோட்டார் சைக்கிள் ஓட்டத்திற்கும் விபத்துக்களுக்கும் காரணமென்று கூறுவதில் என்ன தப்பு? இப்படி ஒரு சம்பவம் 'இளைஞன் ஒருவனால் - அவனது வாகனத்தால் இன்னொருவன் இறந்தார். அவரின் ஆத்மா சாந்தியடையவில்லை. காயப்பட்டவர்களும் சுகமடையவில்லை. அதற்குள் 'இளைஞன்" பிணையில் வெளியில் வந்துவிட்டான். இத்தகைய இளைஞர்களின் பெற்றோருக்கோ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆகிவிட்டதென்ற துரதிர்ஷ்டநிலை, பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இயல்பான, மகிழ்ச்சிகரமான சூழலில் வளரவிடுவதும், அவர்களது உளத்தேவைகளைக் கவனத்திற்கொள்ளுவதுமே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வாகும். மனிதனுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசையே என்பது ஆண்மீக வாதிகளின் கருத்து. மனிதனுடைய ஆசைகளே, அதன் வழியான தேவைகளே பொருளுற்பத்தியைத் தூண்டுகின்றன என்பது பொருளியலாளர்களின் கருத்து. தம்முடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்பதே பெற்றோர்களின் ஆசை. சான்றோன் எனக் கேட்பதே தாயின் ஆசை. அவயத்து முந்தியிருக்கச் செய்வதே தந்தையின் கடன் என்கிறார் வள்ளுவர். இன்றைக்கு எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் மனநிறைவுகொள்ளும் மனநிலையில் இல்லை. அவர்கள் கற்பது போதாதென்ற அங்கலாய்ப்பே பெற்றோரைச் சூழ்ந்து நிற்கிறது. போட்டி மிகுந்த சூழலில் பாடவிதான கற்கைகள், கணனி அறிவு, ஆங்கிலம் என்ற வகையிலேயே பிள்ளைகள் இயக்கப்படுகிறார்கள். பாடக்குறிப்புகளும், கற்கை வழிகாட்டல்களும், வினாவிடைத் தொகுப்புக்களுமே அவர்களிடம் திணிக்கப்படுகின்றன. பத்திரிகைள், சஞ்சிகைகளை வாசிக்கவோ, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழவோ, சுற்றுலாக்களுக்குச் செல்லவோ அவர்களுக்கு 'வாய்ப்பு" வழங்கப்படுவதில்லை. நண்பர்கள் 'சகவாசத்தை" அவர்கள் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில், அதுவே அவர்களின் திசையை மாற்றி, போராட்டம், விடுதலை என்று அழைத்துச் சென்று விடும் என்பது பெற்றோரின் அச்சம். இந்நிலைமையில், க.பொ.த.சாதாரண தரம் வரை அமைதியாக நகரும் மாணவர்கள், பின்னர் பெற்றோர்களிடம் தமக்குள்ள 'பேரம் பேசும் வலுவை" காட்டி விடுகிறார்கள். எனவே, வீடுகளில் டிஷ் அனரனாக்களும், சீடி பிளேயர்களும், கைத்தொலைபேசிகளும், புதிய மொடல் மோட்டார் சைக்கிள்களும் விக்கின்றன. பணக்கார நண்பர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். படம் பார்க்கவும், கடற்கரைக்குச் செல்லவும், மது அருந்தவும் செய்கிறார்கள். தாம் ஒரு குழுவாகின்றனர். எதிரெதிர்க் குழுக்களாய் மோhல்களில் இறங்குகின்றனர். ''நாங்கள் எந்த 'குறூப்" எண்டு தெரியுமோ? கவனமாய் இருங்கோ"" என எச்சரிக்கை விடுகின்றனர். வாள்கள், சைக்கிள் செயின்கள் தாங்கிய குறும் போர் வீரர்களாய் அவர்கள் 'பல்வர்", 'சீபீஸற்" புரவிகளில் பயணம் வருகின்றனர். 'ஹெல்மற்" இன்றி மூன்று பேர் ஒரு வாகனத்தில் பயணிக்க பொலீஸார் தலையாட்டிச் செல்லும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். 'லைசென்ஸ்" தேவையில்லை, நூறு ரூபா 'பொலீஸாருக்கு என்கிறான் இளைஞனொருவன். பொலீஸார் பெறும் 'கையூட்டே" இவ்வாறானவர்களின் 'தலை தெறித்த" மோட்டார் சைக்கிள் ஓட்டத்திற்கும் விபத்துக்களுக்கும் காரணமென்று கூறுவதில் என்ன தப்பு? இப்படி ஒரு சம்பவம் 'இளைஞன் ஒருவனால் - அவனது வாகனத்தால் இன்னொருவன் இறந்தார். அவரின் ஆத்மா சாந்தியடையவில்லை. காயப்பட்டவர்களும் சுகமடையவில்லை. அதற்குள் 'இளைஞன்" பிணையில் வெளியில் வந்துவிட்டான். இத்தகைய இளைஞர்களின் பெற்றோருக்கோ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆகிவிட்டதென்ற துரதிர்ஷ்டநிலை, பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இயல்பான, மகிழ்ச்சிகரமான சூழலில் வளரவிடுவதும், அவர்களது உளத்தேவைகளைக் கவனத்திற்கொள்ளுவதுமே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்.

Wednesday, May 18, 2011

சிறுகதை -பந்தயக்குதிரை

வகுப்பறையில் கடைசி வாங்கின் அந்தத்தில் ஓரமாக எப்போதும் அவனைக் காணலாம். உற்சாகம் கரை புரண்டு சத்தமிட்டபடி வகுப்பிற்குள் ஓடியாடித் திரியும் மாணவர்களிடையே எந்தவித சலனமுமில்லாமல் புத்தகமொன்றைப் புரட்டியபடி அவனிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குழப்படிக்காரர்கள் அவனது புத்தகத்தைப் பறித்துச் சீண்டினார்கள். அவ்வாறு சீண்டிய மாணவர்கள் பலரும் என்முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்கள் தொடர்பில் அவன் என்னிடம் எப்போதும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததில்லை. சக மாணவர்கள்தான் அதை முன்வைத்தார்கள்.

அவன் அமைதியாக, தன்னடக்கமாக இருந்தான். அவனிடம் உற்சாகமான மனநிலையிருக்க வில்லையென்று நான் கருதினேன். ஆனால் அவனது உற்சாகம் அவனுடைய கண்களில் இருப்பதாகவே பின்னர் எனக்குத் தோன்றியது. புத்தகங்களைப் படிக்கும் போது அவனது விழிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நான் அவதானித்திருக்கிறேன்.

எனது வகுப்பிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்தின் பெரும் புள்ளிகளது பிள்ளைகள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பெருவணிகர்கள் போன்றோரின் பிள்ளைகளாகவே அவர்கள் இருந்தனர். ஆடம்பரமும் கம்பீரமும் மிடுக்கும் அவர்களிடம் குடியிருந்தன. எல்லா வகைகளிலும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

புதிது புதிதாகப் புத்தகப்பைகளும், பயிற்சிப் புத்தகங்களும். சப்பாத்துக்களும் வாங்கி வருவார்கள். அவை பற்றித் தமக்குள் பெருமை பாராட்டுவார்கள். ஒருவன் வாங்கியதை விடச் சிறந்ததொன்றுடன் மற்றொருவன் வந்து அடுத்தநாள் அது பற்றிப் பெருமையாகக் கூறுவான். இப்படியே புதிய புதிய சங்கதிகள் ஒவ்வொரு நாளும் என் காதுக்கும்; எட்டும்.

பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் பெற்றோருடன் அலசிய விடயங்களைச் சொல்வார்கள். அவை சுயதம்பட்டங்களாகவோ, மற்றவரை ஏளனப்படுத்துவனவாகவோ இருந்தன. பிள்ளைகளின் கதைகளை நான் அலட்சியம் செய்வதில்லை. அதிக ஆர்வம் காட்டுவதுமில்லை. ஆனால் மற்றவர்கள் போல அவன் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தன்னைப் பற்றியோ, வேறு சம்பவங்கள் பற்றியோ கூட அவன் எதையும் சொன்னதில்லை. மற்றவர்கள் பிரலாபிக்கும் வேளைகளில் அவற்றில் அவன் ஆர்வம் காட்டியதில்லை.

நான் கற்பிக்கும் வேளைகளில் தீட்சண்யத்துடன் அவன் என்னை நோக்குவதை அவதானித்திருக்கிறேன். மற்றவேளைகளில் தலையைக் குனிந்தபடி புத்தகங்களில் கண்களை மேய விட்டிருப்பான். இல்லையென்றால் சாளரங்க@டாக நேரே தென்படும் மைதானத்தையோ, அதன் ஓரமாக நெடிதுயர்ந்து நிற்கும் புளியமரத்தையோ பார்த்துக் கொண்டிருப்பான். ஆரம்பத்தில் ஓரிரு தடவைகள் அப்படிப் பார்ப்பதையிட்டு அவனைக் கடிந்து பேசியிருக்கிறேன். அந்தக் கணங்களில் திடுக்குற்று மிரள விளித்து, என்னைப் பார்ப்பான். பிறகு தலையைக் குனிந்து கொள்வான்.

'என்னசேர்.... உங்கடை வகுப்பிலிருக்கிற சைதன்யன் பாட்டுப் பாடுறானில்லை. கல்லுளி மங்கன் போலை பேசாமல் நிற்கிறான்" என்ற குற்றச்சாட்டை அழகியல் கற்பிக்கும் மேரி ரீச்சர் முதலில் முன்வைத்தார். பின்னர் சிறுவர் நாடகப் போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்த ஆசிரியரும் அவனிடமிருந்து எந்த வெளிப்பாடுமில்லையென்று குறை கூறினார். வரவுப் பதிவின்போது 'பிறசன்ற் சேர்" என்று கூறுவதைத் தவிர அவனது குரலைக் கேட்க முடியவில்லைத்தான்.

மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அவனது படம் வந்திருந்தது. கூடவே பாடசாலை பாராட்டி வாழ்த்திப் பெருமயை வெளிப்படுத்தியிருந்தது. வகுப்பாசிரியரது பிரத்தியேக ரியூசனும் தமது நிறுவனத்தின் சிறப்பான மாணவனாக சைதன்யனை இனங்காட்டி, அவனது சாதனையைப் பாராட்டி விளம்பரம் தேடியிருந்தது.

சைதன்யன் இப்போது தேசியப் பாடசாலையொன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, பிரபலங்களின் பிள்ளைகள் பலரும் அவனுடன் கூடப் படித்தனர். அவனிடம் முன்பைவிட உற்சாகமும் துருதுருப்பும் கூடியிருந்தன. எனினும் புத்தக வாசிப்பும் அவனுடன் கூடவேயிருந்தது.

'உனது நண்பர்கள் யார்?" என்று ஒருமுறை அவனிடம் கேட்டேன்.
'எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள்தான் என்னைத் தங்கடை நண்பர்களாகக் கருதவில்லை." என்று அவன் பதிலிறுத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் அவன் தொடர்பில் அக்கறை காட்டினேன். அப்போதுதான் அவனது பெறுபேறே அவனுக்கு எதிரியாயிருந்ததைக் கண்டு கொண்டேன்.

அவனுக்குக் கற்பிக்கும் ஆசிரியரொருவரும் ரியூசன் சென்ரர் வைத்திருந்தார். அதில் சேருமாறு சைதன்யனைப் பலமுறை கேட்டும் அவன் சேரவில்லை. அதனால் அவர் அடிக்கடி அவனை இகழ்ந்து பேசுவதாகச் சக மாணவனொருவன் என்னிடம் சொன்னான். 'காசு கட்டியா நீ ஸ்கொல~pப் பாஸ் பண்ணினாய்?" என்றும் அவர் கேட்டாராம். எனக்கு இதைக் கேட்கும் போதே கோபமாயிருந்தது. கண்களும் கலங்கின. தவணைப் பரீட்சையில் அந்த ஆசிரியரது பாடத்தில் அவன் புள்ளிகளில் பின்தள்ளப்பட்டான். உயர் புள்ளி பெற்றவனோ 'நீ காசாலை என்னை முந்தினாய். இப்ப நான் உண்மையாய் முந்தீட்டன்... பார்த்தியா?" என்று ஏளனஞ் செய்தான். அவனைப் போலவே சக மாணவர்கள் பலரும் சைதன்யனை பொறாமையோடுதான் நோக்கினர்.

எனக்குச் சங்கடமாயிருந்தது. இப்படியே விட்டால் அவனது உளநிலை பாதிக்கப்பட்டுவிடும். வேறு பாடசாலைக்கு அவனை மாற்றுவது நல்லதெனப்பட்டது. அவனை அணுகி ஆறுதல் கூறினேன். வேறு பாடசாலைக்கு மாறி விடுமாறு வற்புறுத்தினேன். அவனோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தான்.

'சேர், நல்ல மனப்பாங்கு பற்றி இந்தச் சேர்தான் எனக்குச் சொல்லித் தந்தவர். என்னட்டை அது இருக்குது. இவரிட்டையும், மற்ற மாணவரிடத்திலையும் அது குறைவாக இருக்குப் போலை..... அதுக்காக நான் ஏன் மாற வேணும்" அவனது முதிர்ந்த வாhத்தைக@டே விழிகளின் தீட்சண்யம், ஒளிர்ந்து, சூரியக் கதிர்களாகப் பிரகாசித்து என்னை நிலை குலைய வைத்தது.