Tuesday, March 24, 2026

நேர்காணல் : பண்டிதர் க.சச்சிதானந்தன்

 

நேர்காணல் : பண்டிதர் க.சச்சிதானந்தன்

நேர்கண்டவர் : இயல்வாணன்

கேள்வி : நீங்கள் மும்மொழிப் புலமை மிக்கவர்.கவிஞர், எழுத்தாளர், வானியல் வல்லுநர், ஓவியர், கல்வி உளவியலாளர். இவ்வாறு பல்துறை மேதைமை மிக்க உங்களது பிறப்பு, குடும்பம் மற்றும் வாழ்க்கைப் பின்புலத்தை அறிய விரும்புகிறோம்.

பதில் : நான் 1921ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 19ஆந் திகதி மாவிட்டபுரத்தில் பிறந்தேன். என்னுடைய தாயார் தெய்வானைப்பிள்ளை. தந்தையார் கணபதிப்பிள்ளை. என்னுடன் கூடப் பிறந்த ஒரே சகோதரி ஈஸ்வரியம்மா. இதுதான் எங்களது குடும்பம். 

எனது தந்தையார் பஞ்சாங்க கணிதராகஇ வானியல் சோதிட வல்லுநராக விளங்கினார். எழு பரம்பரையாக அவரது மூத்த தலைமுறையினர் பஞ்சாங்க கணிதர்களாக இருந்து வந்துள்ளனர். அப்படியே நானும் கணித்து வருகிறேன்.

ஆரம்பக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்றேன். பருத்தித்துறையில் தந்தையார் இருந்த போது ஹாட்லிக் கல்லூரியில் பயின்றேன். பின்பு மாவிட்டபுரத்தில் இருந்த போது திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் (இப்போதய பல்கலைக்கழகம்) பயின்றேன். புகையிரதம் மூலமாகவே அப்போது பாடசாலைக்கு வந்து போவேன். இந்த மூன்று கல்லூரிகளுமே எனது கல்வியில் பிரதானமான பங்கு வகித்தவை.

கேள்வி : அதன்பின் பண்டிதர் படிப்பை இந்தியாவில் மேற்கொண்டீர்களா?

பதில் : பரமேஸ்ராக் கல்லூரியில் படிக்கும் போது வித்துவான் கார்த்திகேசபிள்ளைஇ நவநீத கிருஸ்ண பாரதியார்இ சு.நடேசபிள்ளை ஆகியோரிடம் கற்று அங்கிருந்து கொண்டே 1941ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றினேன். அப்போது இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தோற்றியவர்களுள் நானே முதலாவதாகச் சித்தியடைந்தேன். இதுபற்றி இந்துசாதனம் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏக காலத்தில் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் படித்தேன். லண்டன் பீ.ஏ. பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன்.

கேள்வி : சமஸ்கிருதம் படித்ததாகக் கூறுகிறீர்கள். அதை யாரிடம் படித்தீர்கள்?

பதில் : நான் அந்தணர்களிடமே சமஸ்கிருதம் படித்தேன். சிவப்பிரகாச தேசிகரிடம் முதலில் சமஸ்கிருதம் படித்தேன். பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் பயின்றேன். மாவிட்டபுரம் பாலசுந்தரக் குருக்கள்இ இராம ஐயர் ஆகியோரிடமும் பயின்று சமஸ்கிருதத்தில் புலமை பெற்றேன்.

நான் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் படித்த போது நடந்த சம்பவம் என் மனதில் நீங்காதுள்ளது. சாஸ்திரிகள் எல்லோருக்கும் வேதம் படிப்பித்துக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பார்த்து “நீ சூத்திரன். நீ வேதம் படிக்கக் கூடாது. நீ அங்காலை திண்ணையிலை போய் இரு” என்று கட்டளையிட்டார். நானும் அவ்வாறே வெளித் திண்ணையில் அமர்ந்துஇ அவர் பிராமண மாணவர்களுக்குச் சொல்லித் தருவதை செவி வழியாகக் கேட்டு அறிவு பெற்றேன்.

கேள்வி : அப்படியானால் ஒரு ஏகலைவனாக இருந்துள்ளீர்கள்.இல்லையா?

பதில் : ஓம்...அப்படித்தான். வேதத்தை எப்படி ஓதுவதென்பது எனக்குத் தெரியும்.(சில வேத ஸ்லோகங்களைப் பாடிக் காட்டுகிறார்) அப்போது சமஸ்கிருத காவியங்கள் பலவற்றையும் படித்தேன். சமஸ்கிருதத்தில் கவிதைகளையும் எழுதுவேன். சமஸ்கிருத அறிவு எனது கவிதை ஈடுபாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்தது.

கேள்வி : உங்களது படைப்பாக்கத்துறையில் கவிதை என்பது பிரதானமானது. கவிதையின்பால் உங்கள் நாட்டம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில் : எனக்கு கவிதையின்பால் ஆர்வத்தை உண்டாக்கியது ஆங்கில இலக்கியங்கள்தான். நான் ஹாட்லிக் கல்லூரியில் படிக்கும் போது கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்கு ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்தேன். ஆங்கில இலக்கியத்திலே ஷேக்ஸ்பியருடைய நாடகம்இ சார்ள்ஸ் டிக்கின்ஸின்  வுயடந ழக வுறழ ஊவைநைள நாவல்இ 300 லுநயசள ழக நுபெடiளா Pழநவசல என்ற என்ற கவிதைத் தொகுதிஇ எடிசனுடைய கட்டுரைகள் என்பவற்றைப் படிக்க வேண்டியிருந்தது.

ஆங்கில இலக்கியத்திலே இருக்கின்ற எழுத்தாளர்கள் மீது எனக்கு விருப்பம் அதிகம்.நான் படிக்கிற காலத்தில் இவர்களின் எழுத்துகளை விரும்பிப் படிப்பேன். இப்பவும்கூட ஷேக்ஸ்பியருடைய ஜுலியர் ஸீஸரையும் மக்பெத்தையும் படித்துக் கொண்டுதானுள்ளேன். மில்ரனின் ஒரு நாடகத்தை எழுபது தடவைகளுக்கு மேல் படித்து விட்டேன். கீற்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞன்தான் எனது அபிமானப் புலவன். ஷெல்லியும் அப்படித்தான். ஆங்கில இலக்கியங்கள் வழியாகவே – அந்த மூச்சோடுதான்- தமிழில் கவிதைகள் எழுதும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது.

கேள்வி : தமிழ் மொழியுணர்வுக் கவிதையான ‘சாவிற் தமிழ் படித்துச் சாக் வேண்டும்’ என்ற அருமையான கவிதையுட்பட பல சுவையான கவிதைகளை எழுதி ‘ஆனந்தத் தேன்’ தொகுதியில் தந்துள்ளீர்கள். அந்தக் காலத்தில் இத்தகைய உணர்வுக் கவிதைகளைப் படைக்க உங்களைத் தூண்டியவை எவை? 

பதில் : தமிழில் இருக்கும் சுவைதான் அக்கவிதையைப் படைக்க என்னைத் தூண்டியது. கம்பராமாயணம்இ திருக்குறள் போன்றவற்றைப் படித்து இன்புற்றுஇ தமிழின் சுவையை அறிந்து கொண்டதாலேயே இதனை எழுதினேன்.

கேள்வி : ஏனைய கவிதைகள் பற்றிக் கூறுங்கள்?

பதில் : அந்தக் காலத்தில் இங்கிருந்து எழுதுகிறவற்றை இந்தியப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. அப்போது நான் எழுதிய பாட்டொன்றுதான் ‘சக்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. ஏ.கே.செட்டியார் என்பவரால் வெளியிடப்பட்ட பெரிய பத்திரிகை அது. அதை நான் நல்லதோர் அங்கீகாரமாகக் கொண்டேன்.

பிறகு 1938ஆம் ஆண்டில் கல்கி பருத்தித்துறைக்கு வந்தபோது நான்தான் அவருக்கு வரவேற்பு பாமாலை பாடிக் கொடுத்தேன். அவருடன் பிரபல ஓவியர் மாலியும் வந்திருந்தார். 

அப்போது எனக்கு 17 வயது. கல்கிக்கு அந்தப் பாட்டின் மீது நல்ல விருப்பம். அவர் அதனை பிறேம் போட்டு தனது வீட்டில் தொங்க விட்டிருந்தார். தனது சரித்திரப் புத்தகத்திலும் அதனை வெளியிட்டுள்ளார்.

நான் அண்மையில் இந்தியாவுக்குப் போனபோது என்னை வந்து பார்த்த கல்கியின் மகன் அது இப்போதும் வீட்டில் மாட்டப்பட்டிருப்பதாகக் கூறினார். என்னைச் சிறுகதைகள் எழுதுமாறு தூண்டியவர் கல்கிதான்.

கேள்வி : ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளர்களுள் ஒருவராக ‘ஆனந்தன்’ என்ற புனைபெயரில் நீங்கள் பல சிறுகதைகளைப் படைத்துள்ளீர்கள். உங்கள் சிறுகதைகளின் பின்னணி என்ன?

பதில் : தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பார்த்தே ‘ஹரிஜனங்களின் கண்ணீர்’ என்ற சிறுகதையை எழுதினேன். அதேபோல ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது அதைக் கொடுக்காமல் விட்டார்கள். அதனால் எழுந்ததே ‘தண்ணீர் தாகம்’ என்ற கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியிலேயே எழுதப்பட்டது.

கேள்வி : சொற்ப காலத்துக்குள் சொற்ப கதைகளையே படைத்துள்ளீர்கள். பின்னர் கதைகளை எழுதவில்லை. இதற்கு என்ன காரணம்? 

பதில் : தி.சதாசிவ ஐயர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரிய சமஸ்கிருத வித்துவான். அவர் எனது ‘சாவிற் தமிழ் படித்துச் சாக வேண்டும்’ பாடலைச் சிறப்பானதெனப் பாராட்டி ‘கலாநிதி’ என்ற பத்திரிகையில் வெளியிட்டார்.

அவர் இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரித்துச் சொன்னார். வாசிக்கும் நூல்கள்இ படிக்கும் நூல்கள்இ கற்கும் நூல்கள் என்பதே அந்தப் பிரிப்பு. ‘வாசிக்கும் நூல்கள் என்பது படித்து விட்டு உடனே எறிந்து விடும் தன்மையானது. படிக்கும் நூல்களும் அவ்வாறனதுதான்.நீர் இதுகளை எழுத வேண்டாம். உம்முடைய படைப்பாற்றலுக்கு என்றும் நிலைத்து நிற்கக்கூடிய படைப்புகளைச் செய்வதே நல்லது. சிறுகதைகள் மற்றவர்களை எழுத விடும். நீர் உயர்ந்த இலக்கியங்களைப் படைப்பதில் ஈடுபடும்’ என்று சொன்னார் சதாசிவஐயர்.

அவ்வாறே நானும் கவிதைத் துறையில் காவியம் ஆக்குவதில் ஈடுபட்டேன். க.தி.சம்பந்தனும் அவ்வாறுதான். சிறுகதைகளை எழுதியவர் பின்னர் அதை விட்டு விலகி சகுந்தல காவியம் இயற்றினார்.

கேள்வி : நீங்கள் ஒரு மரபுக் கவிஞர். மரபுக் கவிதைஇ புதுக் கவிதை எனப் பேதப்படுத்துவது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில் : புதுக் கவிதை என்றுபெயர் வைத்ததே தங்களுக்கு ஒரு புகழ் தேடுவதற்காகவே. ஆங்கிலத்தில் டி.எச்.லோறன்ஸ் முதலானவர்கள் இவ்வாறான கவிதைகளை எழுதியுள்ளனர்.அது கட்டற்றஇ வடிவற்ற(குழசஅடநளள Pழநவசல) என்பதுதான்.இந்தியாவுக்குப் போனபோது சண் ரி.வி.பேட்டியின் போதும் இக்கேள்வியைக் கேட்டனர். ஆங்கிலத்தில் டி.எச்.லோறன்ஸின் வுhந ளுயெமந என்ற கவிதை முக்கியமான வடிவமற்ற கவிதை. ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் வித்தியாசமுண்டு. ஆங்கிலம் ஒரு யஉவழைநென டுயபெரயபந. (சில சொற்களை உச்சரித்துக் காட்டுகிறார்.) ஆங்கிலத்தில் வசனமாக எழுதினாலும் சொல்லும் போது ஒரு ரிதம் இருக்கும். தமிழில் அப்பிடியில்லை.

கேள்வி : கவிதைக்கு ஓசை முக்கியம் என்று கருதுகிறீர்களா?

பதில் : நான் இப்போது ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதியுள்ளேன். குரனெயஅநவெயடள ழக வுயஅடை Pசழளழனல (தமிழ் யாப்பிலக்கண அடிப்படைகள்) என்பது அந்நூலின் பெயர். அதில் தமிழ்க் கவிதையின் அடிப்படை என்ன என்பது பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். தமிழில் செப்பலோசைஇ அகவலோசை என்ற இருவகை ஓசைகள் உள்ளன. அகவலோசையில் இருந்து வஞ்சி பிறந்தது. செப்பலோசையில் இருந்து கலி பிறந்தது. இது பற்றி இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

இந்த ஓசைகள் இல்லாத பாட்டுகள் கவிதையாக இருக்க முடியாது. கட்டற்ற கவிதைகளைப் பலரும் எழுதுவதற்குக் காரணம் அவர்களுக்குச் சொற் களஞ்சியம் போதாமையே.

அண்மையில் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் ஒரு ஆங்கிலக் கட்டுரை பார்த்தேன். அதில் சிங்களக் கவிதை இறந்து விட்டதாக எழுதியிருந்தார் கட்டுரையாளர். அதேநிலைதான் இங்கும் உள்ளது. 

வடிவற்ற கவிதையை எழுதும் வல்லமை கூட உயர்ந்த கவிஞர்களால்தான் முடியும். எண்ணமும் சொற்களும் இல்லாதவர்களால் நல்ல கவிதையைப் படைக்க முடியாது. எழுதப்படும் கவிதைகள் காலங்காலமாக அழியாவரம் பெற்றவையாக நின்று நிலைக்கும் போதே அவை சிறந்த கவிதைகளாக இருக்கும்.

கவிதை மட்டுமல்ல சங்கீதமும் அப்படித்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமிஇ அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்இ முசிறி சுப்பிரமணிய ஐயர் போன்றோரின் பாடல்கள் இப்போதும் சுவை தருகின்றன. இப்போதைய பாடல்கள் ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பது போல சில நாள்களிலேயே மறந்து விடுகின்றன.

கேள்வி : முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருடன் நெருக்கமான தொடர்பைப் பேணியவர் நீங்கள். எவ்வாறு அவருடனான தொடர்பு ஏற்பட்டது?

பதில் : விபுலானந்தர் யாழ்நூல் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது யாழ்ப்பாணத்திற்கு வந்தார். வந்து அம்பிகைபாகன்இ நவரத்தினம் ஆகிய நண்பர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் தமிழும்இ விஞ்ஞானமும் தெரிந்த ஒரு பண்டிதர் வேண்டும் என்று கேட்டார். அவர்கள் என்னையும் வேறு சிலரையும் அனுப்பி வைத்தனர். யாழ்ப்பாணத்தில் ‘கலா நிலையம்’ என்ற இடத்தில் நேர்முகப் பரீட்சை நடத்தினார் விபுலானந்தர். அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் விடையளித்தேன்.

அதன்பின் தான் கடிதம் அனுப்புவதாகவும்இ கொழும்பில் தன்னுடன் வந்து பணியாற்றுமாறும் சொல்லி என்னைத் தெரிவு செய்தார். அந்தக் கடிதம் இப்போதும் என்னிடமுள்ளது. அப்போது அவர் கொழும்பில் பேராசிரியராக இருந்தார். சு.வித்தியானந்தன்இ க.சதாசிவம் போன்றோர் அவரிடம் படித்துக் கொண்டிருந்தனர்.

என்னை அழைத்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தந்தார். அங்கிருந்து அவரது ஆராய்ச்சிக்குத் தேவையானவற்றை எழுதினேன். அவருடன் இந்தியாவுக்கும் போனேன்.

திருக்கொள்ளம் புதூர் என்ற இடத்தில் பெருந் தனவந்தர் ஒருவரின் மாளிகையில் தங்கியிருந்துஇ பல கோயில்களுக்கும் சென்று ஆராய்ச்சி செய்தேன். குழல்இயாழ் என்பவற்றின் அளவுஇ அவற்றின் ஒலிஇ வகை போன்றவற்றைப் பற்றி அறிந்து குறிப்புகள் எழுதினேன். மகரயாழ் பற்றிய விடயங்களை அறிந்து படமாக வரைந்தேன். விபுலானந்தரின் யாழ்நூலில் உள்ள மகரயாழ் நான் வரைந்ததே.

ஆராய்ச்சியின் நிமித்தம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் போனேன். அங்கு மூன்று தொகுதியான தூண்கள் உள்ளன. வெறும் கல் தூண்கள்தான். ஆனால் அவற்றில் முதல் தொகுதியை விரலால் சுண்டும் போது ‘ஸரிகமபதநி’ என்கிற ஏழு சுரங்களும் கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும். அடுத்த தொகுதி மத்திய ஸ்தாயியிலும்இ மற்றத் தொகுதி உயர் ஸ்தாயியிலும் ஒலிக்கும். அந்த மாதிரி அதனை அமைத்துள்ளார்கள்.

கேள்வி : விபுலானந்தருடன் பழகிய வகையில் அவரைப் பற்றிஇ அவரது குணாம்சங்கள் பற்றிக் கூறுங்கள்?

பதில் : அவர் ரொம்ப படித்தவர். தமிழிலும்இ ஆங்கிலத்திலும்இ சமஸ்கிருதத்திலும் அவர் எல்லோரையும் விட சவல்லுநர். மாலைவேளையில் தெகிவளை வீதியால் அவர் நடை பயிலும் போது என்னையும் அழைத்துச் செல்வார். தனது ‘கங்கையில் விடுத்த ஓலை’ கவிதையை முதன்முதல் அவர் எனக்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். அவருடைய நண்பன் அண்ணாமலை பல்கலைக்கழகத்து இலக்கண வித்துவானான கந்தசாமியார் இறந்த துயரில் அதனைப் பாடினார்.

சிலகாலம் சுவாமி விபுலானந்தர் ஹிமாலயா நிறுவனத்தில் வெலை செய்தார்.  அப்போது ‘பொன்மல் இமயம்’ போன்ற கவிதைகளை எழுதியும்இ படங்களை வரைந்தும் உள்ளார். ‘பிரபுத்த பாரத’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் அவரிருந்தார். அவர் நன்றாகக் கவிதை எழுதுவார்.ஷேக்ஸ்பியரின் ஜுலியர் சீஸரை மொழிபெயர்த்து அவர் எழுதிய ;அஞ்சினர்க்குச் சத மரணம்’ என்ற கவிதை அருமையானது. அவரது ‘மதங’க சூளாமணி’ நாடக நூல் மதுரைப் பண்டித பரீட்சைக்குப் பாடநூலாக இருந்தது. அவர் ஒரு பெரிய மனிதன்.

பிற்காலத்தில் ஒருமுறை அவருக்கு நெருப்புக் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இப்போது இராமகிருஸஷ்ண மிஷன் கட்டடம் இருக்கும் இடத்தின் மறுபகுதியை அப்போது இராணுவத்தினர் பொறுப்பேற்றிருந்தனர். மறுபக்கத்தில் நானிருந்தேன். இராமகிலுஷ்ண மிஷன் முழுவதற்கும் பாதுகாவலனாக நான்தானிருந்தேன்.

ஒருநாள் ஹம்டன் வீதியில் ஓரிடத்தில் சாப்பிட்டு விட்டு வந்தேன். வரும்போது தலை சுற்றத் தொடங்கியது. முழுகாதது பித்தமாக இருக்கும் என நினைத்து விட்டுக் கடைக்குப் போய் சீயாக்காய்இ வெந்தயம்இ அரப்பெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன். வரும்போதும் ஒரு தடவை தலை சுற்றியது. கொண்டு போன பொருட்களை வைத்து விட்டு சிறிதுநேரம் சாய்ந்து படுத்தேன். அப்போதும் கட்டிலை ஆட்டுவது போலிருந்தது. மறுநாள் விடிய எண்ணெய் தெயத்து முழுகிக் கொண்டிருக்கும் போது டெய்லி நியூஸ் பத்திரிகை வந்தது. அதன் தலைப்புச் செய்தியாக சிறியதொரு நில நடுக்கம் கொழும்பில் ஏற்பட்டதாக வந்திருந்தது. இது நடந்தது 1943 என்று நினைக்கிறேன்.

கேள்வி : யாழ்ப்பாணக் காவியம் என்ற அருமையான நூலை 4 பருவங்கள்இ 38 படலங்கள்இ இரண்டாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்கள் கொண்டதாக ஆக்கியுள்ளீர்கள். நூற்பிறப்புப் பற்றிப் பாயிரம் பாடியுமுள்ளீர்கள்.இந்நூல் எழுந்த பின்னணியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில் : அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியில் நான் நாயாக உழைத்தேன். 1958இல் தமிழர்களுக்கெதிராக கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலரும் எமது பிரதேசத்துக்கு வந்தனர். அந்த நேரத்தில் எமது தமிழர் வாழும் பிரதேசத்தில் சிங்களக் குடீயேற்றங்களைத் தடுத்து நிறுத்திஇ அந்த இடங்களிலே தமிழர்களைக் குடியமர்த்திஇ விவசாயச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழரசுக் கட்சியினர் தீர்மானித்தனர்.

அப்போது வவுனியாக் கச்சேரியில் அரச அதிபராக இராசதுரை என்பவர் இருந்தார். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் சிலர் அவருடன் பேச்சு நடத்தினோம். அவர் எங்கள் எல்லோருக்கும் பத்து ஏக்கர் காணியினை வழங்கினார். இது பற்றிய நாடாளுமன்றப் பதிவேட்டில்(ஹன்சார்ட்) எனது பெயரும் பதியப்பட்டுள்ளது.

பதவியா என்ற பிரதேசத்தில் நாங்கள் காடுகளை வெட்டி விவசாயச் செய்கையை மேற்கொண்டோம். தொழிலாளர்கள் சிலரும் நானும் அங்கு தங்கி நின்றே விவசாயத்தை மேற்கொண்டோம். அங்கு அரைப்பனை உயரத்தில் ஒரு பாலைமரம் நின்றது. அதிலே மூன்று அடுக்குகள் கொண்டதாக களிமண்ணாலும்இ மரந் தடிகளாலும் கொட்டிலை அமைத்திருந்தோம். மேல் அடுக்கில்தான் என்னைத் தங்கச் சொன்னார்கள். இரவு வேளைகளில் மிருகங்களில் இருந்து தப்புவதற்காகத் தீ மூட்டுவோம்.

ஒருநாள் நாங்கள் படுத்திருந்தோம். திடீரென ஒரே இரைச்சலாயிருந்தது. ஆர்ப்பரித்து எழும் கடலின் இரைச்சல் போல அது இருந்தது. காடு பரிச்சயமான அந்தத் தொழிலாளர்களிடம் கேட்டேன் அது என்ன சத்தமென்று. அவர்களுக்கும் புரியவில்லை.

காலை எழுந்ததும் என்ன சத்தமென்று அறிய ஆவற்பட்டேன். தொழிலாளர்களும் நானும் துவக்குகளையும் எடுத்துக் கொண்டு பற்றைகளை விலக்கி விலக்கி நடந்து நடந்து போனோம். நடந்து நடந்து ஆறு ஏழு கட்டைக்கு(மைல்) அப்பால் போய் மிதந்தோம். அப்போது எதிரில் பெரியதொரு அணைக்கட்டு எதிர்ப்பட்டது. ‘பரராசசேகரன் அணைக்கட்டு’ என அணையின் கீழே கருங்கல்லில் எழுதப்பட்டிருந்தது. பத்தடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட கருங்கற்களை குழியும் பொழியுமாகப் பொருத்தித்தான் அந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. 

அந்தக் கற்களிலொன்று விழுந்து விட்டது. அதிலிருந்து குளத்து நீர் நீர்வீழ்ச்சி போலப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பேரோசையே எமக்குப் பெரும் இரைச்சலாக கேட்டிருக்கிறது.

அதைத்தான்

நீரோசை முரசாகத் தமிழோசை நெஞ்சிலெழும்

ஓரோசை மனவோசை யாகியெனை உந்துதலால் 

பாரோசை கேட்கவெனப் பாவாகி யாழ்ப்பாணப்

பேரோசை காவியமாய்ப் பிறந்ததுவே செந்தமிழாய்

என்று யாழ்ப்பாணக் காவியத்தின் பிறப்புப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

பின்னர் பரராசசேகரன் பற்றிஇ யாழ்ப்பாணஅரசு பற்றியெல்லாம் நான் தேடி ஆராய்ந்தேன். கொழும்பு அருங்காட்சியக நூலகத்துக்குப் போய் பல்வேறு சான்றாதாரங்களையும் கண்டறிந்தேன். பல சரித்திர நூல்களைப் பார்வையிட்டேன். அதன்பின்னர்தான் யாழ்ப்பாணக் காவியத்தை எழுதினேன். கி.பி.1450 முதல் 1467 வரையான பதினேழு ஆண்டுகால யாழ்ப்பாண அரசின் சரித்திரம் இக்காவியத்தில் உள்ளது.

கேள்வி இலங்கைக் காவியமான ‘பருவப் பாலியர் படும்பாடு’ என்ற பெரியதொரு காவியநூலை ஆக்கியுள்ளீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.

பதில் : பருவப் பாலியர் படும்பாடு என்ற நூல் எனது ஆயளவநச Pநைஉந. நான் அதில் 1950 முதல் 1992 வரையான 42 வருட இலங்கையின் சரித்திரத்தைப் பாடியுள்ளேன். இதில் மெனிக்கா என்றொரு பாத்திரம் வருகிறது. நான் படைத்தவற்றுள் என் மனதைக் கவர்ந்த பாத்திரம் அதுதான்.(அழுகிறார்) அது ஒரு சிறந்த படைப்பு. இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற எல்லாச் சம்பவங்களையும்இ எல்லா விடயங்களையும் கவனத்தில் எடுத்து நான்காயிரத்து நானூறு (4400) பாடல்களில் (செய்யுள்) அதனைப் பாடியுள்ளேன்.

இந்த நூலைப் படித்தவர்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு பவுண் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

கேள்வி :உங்களது சிறந்த படைப்பு எனக் கருதும் நூலுக்கு நீங்கள் வெளியீட்டு விழா வைக்கவில்லை. ஏன்?

பதில் : புத்தகங்கள் விற்கப்படுவதற்காகச் சிலரை அழைத்துச் செய்வதே இந்தப் வெளியீட்டு விழாக்கள். மேலைநாடுகளில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்தப்படுவதில்லை. எனது புத்தகங்கள் நல்லதென்றால் உலகம் அதனை வாங்கும். அதனால்தான் நான் வெளியீட்டு விழாவை நடத்தவில்லை.

கேள்வி :இன்றைய வழக்குகளையும் உள்வாங்கி தமிழுக்கான பிரயோக இலக்கண நூலாக ‘மஞ்சுகாசினியம் இயங்கு தமிழியல்’ என்ற நூலை எழுதியுள்ளீர்கள். அதை எழுத நேர்ந்ததேன்?

பதில் : தமிழ் இலக்கணத்தைப் புதிய வகையில் எளிமையான முறையில் தொல்காப்பியம்இ நன்னூல் போன்றவற்றின் அடிப்படையில் எழுத வேண்டுமென்று தமிழ்நாட்டில் எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு அமைக்கப்பட முன்னரே அவ்வாறானதொரு முயற்சியை நான் ஆரம்பித்து விட்டேன். எனினும் ஐந்தாறு  ஆண்டுகள் கடந்த பின்னும் அப்படியொரு நூலை அவர்கள் ஆக்கவில்லை; இன்றுவரை. 

நான் தொல்காப்பியத்தைச் சுருக்கமாகஇ இக்காலப் பிள்ளைகளுக்கு விளங்கக்கூடிய வகையில் இந்நூலில் தந்துள்ளேன். பல்கலைக்கழக மாணவர்கள் இந்நூலை விரும்பிப் படிக்கிறார்கள். என்னிடம் நேரடியாக வந்து அவர்கள் அதிகம் பிரதிகளை வாங்கியிருக்கிறார’கள’.

கேள்வி : தமிழில் தொல்காப்பியர் அடிப்படையில் இலக்கண நூலாக்கம் செய்த நீங்கள் ஆங்கிலத்தில் குரனெயஅநவெயடள ழக வுயஅடை Pசழளழனல என்ற நூலை ஆக்கியுள்ளீர்கள். இதற்கான தேவைப்பாடென்ன?

பதில் :இந்தியாவில் ந.கோ.கந்தசாமிஇ எம்.சுப்பிரமணியம் ஆகியோர் திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வினைச் செய்துள்ளனர். அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் சில அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. ளுலடடயடிடந என்பதை அவர்கள் அசை என்று கருதுகின்றனர்.ஆனால் ஆங்கிலத்தில் ளுலடடயடிடந என்பதும் தமிழில் அசை என்பதும் வேறானவை. அப்படையான இந்தப் பிழையால் அவர்களது ஆராய்ச்சிகளே தடம் மாறி விட்டன. தொல்காப்பியத்தின் செய்யுளியலை அடிப்படையாக வைத்து நான் இந்த நூலை எழுதியுள்ளேன். அதுபற்றி இந்தப் பேட்டியில் விளக்கம் தருவது பொருத்தமல்ல.

மேற்கூறியவர்கள் எழுதிய பெரிய ஆங்கில நூல்களை வைத்தே கர்நாடகம்இ தெலுங்கு முதலான ஏனைய மொழிகளிலும் பிழையான வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றன. எனவேதான் எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இந்தநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளேன்.

இந்நூலுக்கு ர்iனெர பத்திரிகை விமர்சனம் எழுதியிருந்தது. அதைப் படித்த ந.கோ.கந்தசாமி அண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது என்னை வந்து சந்தித்தார். எனது நூலின் பிரதிகளையும் வாங்கிச் சென்றார்.

கேள்வி : நீங்கள் ஆங்கிலத்தில் சிறுகதைகளையும் அரசியல் நூலொன்றையும் ஆக்கியுள்ளீர்கள் அல்லவா? 

பதில் : ஆம்! நான் பதினைந்து சிறுகதைகள் வரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அத்தோடு தமிழரசுக் கட்சியின் வரலாற்றை செல்வநாயகத்தை மையமாகக் கொண்டு எழுதிய நூலே நீங்கள் குறிப்பிட்ட அரசியல் நூல் . குழழவிசiவெள ழக ழரச குயவாநசள என்பது அந்நூலின் பெயர்.

கேள்வி : ‘மஞ்சு மலர்க்கொத்து’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளீர்கள். இதனை எழுதுகின்ற விருப்பு அல்லது சந்தர்ப்பம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில் : 1965ஆம் ஆண்டு கலாநிதி என்.எம்.பெரேரா உயர்கல்விக்கான குழுவொன்றை அமைத்தார். அந்தக் குழுவில் என்னையும் பிரதிநிதியாக நியமித்தார். அக்குழுவினராகிய எங்களுக்கு எல்லா வசதிகளையும் அளித்து 25 சதத்துக்கு விற்கக்கூடியதாக பாலருக்கு ஒரு புத்தகம் எழுதும்படி அவர் பணித்தார். நானும் சிங்கள் எழுத்தாளர்களோடு இணைந்து இப்பணியில் ஈடுபட்டிருந்தேன். 

நான் சற்று விரைவாகவே வேலைகளைச் செய்தேன். அப்போது சிங்கள நண்பர்கள் தங்களைப் போல ஆறுதலாக எழுதுமாறும்இ நாள்களை இழுத்துத்தான் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். நான் அதைப் பொருட்படுத்தாமலே விரைவாக எழுதிக் கொடுத்து விட்டேன். ‘தமிழ் மலர்’ என்ற பாடநூல் முதன்முதலில் என்னாலேயே எழுதப்பட்டது. மூன்றாவது தமிழ் மலர் எழுதும் போது என்னுடன் சிற்பி சிவசரவணபவனும் இணைந்து பணியாற்றினார்.

இந்த மலரை எழுதும் போது சின்னப் பிள்ளைகளுக்கு எழுத்தும் பாட்டுமாகப் படிப்பிக்க வேண்டுமென்பதற்காக நான் சில பாடல்களை எழுதினேன். அப்போது யார் எழுதியது என்று நூலில் போடக்கூடாது என்று பணித்திருந்தார்கள். அதனால் இப்பாடல்களை யார் எழுதியது எனத் தெரியாதிருந்தது. எனக்குப் பின்னர் பாடநூல் எழுத்தாளர்களாக இருந்த பலரும் தமது பெயர்களைப் புத்தகங்களில் போடத் தொடங்கினர். தமிழ் மலருக்கென நான் எழுதிய பாடல்களுடன் வேறு சில பாடல்களையும் இணைத்தே ‘மஞ்சு மலர்க் கொத்தை’ உருவாக்கினேன்.

இந்த நூலில் இரண்டு விதமான சிறப்புகள் உள்ளன. இந்தப் பாடல்களை எப்படிப் பாட வேண்டும் என்ற ஒலிக் குறிப்புகள் உள்ளமை என்பது முதலாவது சிறப்பு. இது வேறு நூல்களில் இல்லை. இந்தப் பாடல்களை உடுவில் மகளிர் கல்லூரி உட்ப பல பாலர் பள்ளிகளுக்குக் கொடுத்து இசையுடன் பாடச் செய்தேன். பியானோவைப் பயன்படுத்தி இப்பாடல்களை இசையுடன் பாடிப் பரீட்சித்துஇ அந்த ஒலிக் குறிப்புக்களையே இந்நூலில் இணைத்துள்ளேன்.

மற்றது இந்நூலுக்கான படங்கள். இந்தப் பாடல்களைப் படித்து விட்டு குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிவது பொருத்தமானதெனக் கருதினேன். இந்தப் பாடல்களைப் பள்ளிகளில் கொடுத்து அப்பாடல்கள் பற்றிய படங்களை வரையுமாறு ஆரம்ப வகுப்பு மாணவர்களைக் கேட்டேன். அவர்களும் ஆர்வத்தோடு நிறைய வரைந்து தந்தனர். அவற்றில் இரண்டு பாடல்களுக்கு வரையப்பட்ட மாணவர்கள் சிலரது படங்களை இணைத்திருக்கிறேன். ஒவ்வொரு மாணவனும் வித்தியாசமாகப் பார்க்கும் நிலையை இப்படங்களில் காணலாம்.

நூலின் முகப்பு அட்டையை வரைந்தவர்4 வயதுப் பிள்ளை. எனது பாடல்களைப்படித்து இரசித்து தமது மனநிலைக்கேற்ப சிறுவர்கள் வரைந்ததைப் போட்டிருக்கிறேன்.

கேள்வி : இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? 

பதில் : எடுத்த மலர்களும் தொடுத்த மாலையும் என்றொரு நூலை அச்சிட்டுக் கொண்டிருக்கிறேன். இதிலே எடுத்த மலர்கள் என்பது நான் முன்பு எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தது. தொடுத்த மாலை என்பது 1995ஆம் ஆண்டு இடம்பெயர்வையும்இ அதன் பின்னரான வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்து விளக்கும் வகையிலான பாடல்களைக் கொண்டது. இடம்பெயர்வின் பின்னரான நமது பாடுகளை இது சொல்கிறது.

கேள்வி : நீங்கள் ஒரு கல்வி உளவியல் விரிவுரையாளராகஇ பலாலி ஆசிரிய கலாசாலையின் உப அதிபராக இருந்துள்ளீர்கள். உளவியலில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளீர்கள். நீண்ட காலம் கல்விப் புலத்தில் இயங்கியவர். அந்த வகையில் நமது கல்விமுறை தொடர்பில் உங்களது அவதானிப்பு என்ன?

பதில் :நமது கல்விமுறை பற்றிச் சொல்வதென்றால் அது ஆயிரம் பீத்தல்கள்(ஓட்டைகள்) உள்ள சேலை என்றுதான் சொல்லலாம். அதிலே எங்கே ஓட்டையை அடைப்பதென்பதுதான் பிரச்சினை. ஏனெனில் கல்வியின் எல்லா அம்சங்களிலும் குறைகள் உள்ளன. இதில் எது பிழைஇ எதைச் சீர்செய்யலாம் எனக் கண்டறிவது கடினம். கிராமத்தில் சொல்லுவார்கள் ‘ஆச்சி சமைச்ச மயிருக்கை ரண்டு கீரையும் கிடக்குது’ என்று.  பிழைகள் குறைகள் நிறைய இருக்கின்றன. நல்ல விசயங்களும் இரண்டொன்று உள்ளன.

கல்வி முறை பற்றிப் பேசுவதென்றால் அதற்கு தனியாக ஒரு செவ்வியே தரலாம். இப்போதெல்லாம் புலமைப் பரிசில் பரீட்சைஇ இந்தப் பரீட்சைஇ அந்தப் பரீட்சையிலை என்ன குறைவு? அதை எப்படி நிவர்த்திக்கலாம்? என்று உங்களது பத்திரிகைகளில் செய்திகள்இ பேட்டிகள் வெளிவருகின்றன.

யுசஅ ஊhயசை நுனரஉயவழைn என்று சொல்வார்கள். சார்மனைக் கதிரையில் இருந்து கொண்டு கல்வியைத் திட்டமிடுவதே இங்கு நடக்கிறது. அப்படிக் கல்வியைத் திட்டமிட முடியாது. வகுப்பறைக்குள் நுழைந்துஇ பிரயோக ரீதியாக கற்பித்தலை மேற்கொண்டுஇ பிள்ளைகளின் நிலையை அறிந்து இந்தக் கல்வி உருவாக்கப்படவில்லை. கல்விக் கொள்கையை வகுப்போர்இ கல்வி அதிகாரிகள் எனப்படுவோர் ஒருநாளாவது வகுப்பறைக் கற்பித்தலைச் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. வகுப்பறையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சார்மனைக் கதிரையில் அமர்ந்திருப்பவர்களே இப்போது கல்வியைப் பற்றி நிறையக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சமைப்பதென்று யாரும் சொல்லித் தரலாம். ஆனால் சமைத்தல்லோ காட்ட வேணும்.

கிரிக்கெற் விளையாட்டிலும் யுசஅ ஊhயசை ஊசiஉமநவநசள இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் கிரிக்கெற் மட்டையைத் தொடாதவர்கள். ஆனால் கிரிக்கெற்றைப் பற்றிக் கதைத்து ஆலாபனை செய்வார்கள். அவர்களைப் போலத்தான் இந்தக் கல்வி அதிகாரிகளும் பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள். சுவாரஸ்யமாய்இ பொழுதுபோக்காய் கதைக்கின்றார்கள்.

அண்மையில் கோப்பாயில் மூன்றுநாள் கல்விக் கருத்தரங்கொன்று நடைபெற்றது. எல்லோரும் கூடி முஸ்பாத்தியாக கதைத்தார்கள். மாணவர்களின் பிரச்சினைகள்இ கல்வியில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் பற்றியெல்லாம் ஆக்கபூர்வமாக கதைக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கே அப்படிக் கதைக்கப்படவில்லை. சும்மா அது இப்படி இது அப்படி எனக் கூறிக் கொண்டே நேரம் கழிக்கப்பட்டது.

கேள்வி : நீங்கள் ஓர் ஓவியரும் கூட. ஓவியம் வரையும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில் : நான் ஙாட்லிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாலத்தின் மீது அமர்ந்து கொண்டு  ஒரு காலை உயர்த்தியபடி ஒருவன் மீண் பிடித்துக் கொண்டிருக்கும் படத்தை வரைந்திருந்தேன்.எங்கள் பாடசாலையில் ஓவிய ஆசிரியராக எஸ்.ஆர்.கனகசபை இருந்தார். அவர் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஏநசல புழழன எனக் குறிப்பு இட்டுஇ என்னை அழைத்தார். ‘நீர் ஒரு சிறந்த ஓவியர்’ எனப் பாராட்டினார். ஓவிய நுணுக்கங்களைக் கற்பித்தார். ஓவியம் வரையும் போது ஒரே கோடாக இழுக்க வேண்டும். பிறகு திருத்தங்களைச் செய்யலாம் என்றும் அவர் கூறினார். அவரது திருத்தங்களை உள்வாங்கிப் பல ஓவியங்களை வரைந்துள்ளேன்.

ஓய்வு நேரங்களிலும்இ மனம் பாரமாக இருக்கின்ற வேளைகளிலும் நான் ஓவியத்தையே வரைவேன். நான் 1985ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வோர் இடங்களாகத் திரிந்து அல்லற்பட்டிருக்கிறேன். இவ்வாறு ஏற்பட்டதனால் நான் மன அழுத்தங்களோடுதான் வாழ வேண்டியுள்ளது. ஆனால் அதற்காக யோசித்து துன்பப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காகவே நான் ஓவியங்களை வரைகிறேன். எனது ஓவியத்தின் அடிப்படை இதுதான்.

நான் வெளிப்பாட்டுச் சித்திரங்களையெல்லாம் வரைந்திருக்கிறேன். கடற்கரையில் போய் அமர்ந்திருந்து கடற்கரைக் காட்சிகளை வரைந்திருக்கிறேன். இவையெல்லாம் எனது மன ஆறுதலுக்காகவே. இவற்றை நான் பத்திரிகைகளுக்கோஇ வேறு எங்கேனுமோ கொடுப்பதில்லை.

கேள்வி : அடுத்து உங்கள் அரசியல் பக்கம். தமிழ்த் தேசிய அரசியலின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒலுவராக நீங்களும் இருந்துள்ளீர்கள். உங்களது ஆரம்பகால அரசியற் செயற்பாடுகளைக் கூறுங்கள்.

பதில் : எனது அரசியல் ஈடுபாட்டைச் சொல்வதென்றால் அது நீண்ட கதையாகி விடும். 1937ஆம் ஆண்டு முதல் இற்றை வரையான தமிழர்களின் அரசியல் வரலாற்றுக்கு நானொரு சான்றுத் தூணாக இருக்கிறேன் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

1947ஆம் ஆண்டு அரசியல் யாப்பை உருவாக்கிய சோல்பரி குழுவினர் யாழ்ப்பாணம் வந்தபோது நான் ஹாட்லிக் கல்லூரியில் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தேன். நான் ஆங்கிலம் பேசக்கூடியவனாக இருந்ததால் எமது கல்லூரி ஆசிரியரான வோல்ரன் என்பவர் என்னை அழைத்துச் சென்று சோல்பரி குழுவினரைச் சந்திக்க வைத்தார். சுநளவ ர்ழரளந இல் நான் சோல்பரிஇ பிரடெரிக்இ பரோஸ் ஆகிய மூவரையும் சந்தித்துக் கதைத்தேன். இது பற்றி இந்து மகளிர் கல்லூரிச் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த கர்த்தாக்களுள் நானும் ஒருவன். செல்வநாயகந்தான் தமிழரசுக் கட்சியென்ற பெயரை வைத்தவர். கொழும்பு காலிமுகத்திடலில் நாகநாதனின் மருந்தகத்தில் இருந்து நாங்கள் காரில் வந்து கொண்டிருந்த போதுதான் தந்தை செல்வநாயகம் இப்பெயரைத் தெரிவு செய்தார்.

தந்தை செல்வா அறங்காவற் குழுவினர் அண்மையில் பல்கலைக்கழகத்தில் எனக்கு விருது தந்தபோது கூறினார்கள் ‘தந்தை செல்வா சச்சி இல்லாமல் வெளிக்கிட மாட்டார்’ என்று. தந்தை செல்வாவுக்கு ஒரு வகையில் ஆலோசகராகவும் இருந்துள்ளேன். முதல் முதல் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தைச் செய்ய வேண்டுமென்று தூண்டிஇ அதைச் செய்வித்தவர்கள் நானும் பொட்டர் நடராசாவுந்தான்.

அதேபோல காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை வரை யாத்திரையை ஆரம்பித்ததும் நானே. கச்சேரி முன்பாக நடந்த சத்தியாக்கிரகத்தில் ஆள்களைச் சேர்த்து வந்துஇ அதிலே அமர்ந்து அடிவாங்கியவர்களில் நானும் ஒருவன். நாகநாதனுக்கு பொலிசார் அடித்த ‘பற்றன’ தடி முறிந்ததுஇ ஜீப்பை மறித்து நாகநாதன் கழுத்தைக் கொடுத்தது... இதுகளையெல்லாம் நேரிலை கண்டு அனுபவிச்சவன். அதுகளை விடுங்கோ. அமிர்தலிங்கம் எவ்வளவோ காலத்துக்குப் பின்னர்தான் கட்சியில் சேர்ந்தவர். பழைய தமிழரசுக் கட்சிக் காரர்களில் கந்தையாஇ அருணாசலம்இ அரசரத்தினம் போன்ற சிலர்தான் இன்றுள்ளனர்.

கேள்வி : இறுதியாகஇ நீங்கள் ஒரு வானியல் வல்லுநர்.வானியல்இ சோதிடம் இரண்டுக்கும் இடையிலான ஒருமைப்பாடென்ன?

பதில் : வானசாஸ்திரம் ஒரு விஞ்ஞானக் கணிப்பு. சோதிடம் அதை வைத்துக் கொண்டு பலவிதமான பலன் சொல்வது. சோதிடத்தை ஒரு விஞ்ஞானமென்று சொல்ல முடியாது. ஓர் அறிவும் இல்லாதவன் எழுந்தமானத்தில் பதில் சொல்லும் நிலை சோதிடத்தில் உள்ளது. வானியல் முற்றிலும் விஞ்ஞானக் கணிப்பே.

சோதிடம் பற்றிச் சொல்லும் போது தந்தைசெல்வநாயகம் சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

கிரேக்க தேசத்தில் தம்மில் அரசனாக வருவது யார் என்று அறிவதற்காக இரண்டு சகோதர்கள் ஒரு சோதிடரிடம் போனார்களாம். அந்தச் சோதிடன் ‘உங்களில் யார் தாயை முத்தமிடுகிறார்களோ அவர்தான் அரசன்’ என்று சொன்னாராம். உடனே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தாயை முத்தமிட ஓடினார்கள். போகும் வழியில் ஒருவன் தடக்கி நிலத்தில் வீழ்ந்து விட்டான். மற்றவன் ஓடிச் சென்று முதலில் தாயை முத்தமிட்டான். அவன்தான் அரசனென்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால் தடக்கி விழுந்தவன்தான் அரசனாக வந்தான். உடனே மற்றவன் சோதிடனிடம் சென்று கேட்டபோது சோதிடன் சொன்னானாம் ‘இந்தப் பூமித் தாயை அவன் முதலில் முத்தமிட்டான். அதனால்தான் அரசனானான்’ என்று. 

நான் இப்போது வேத வானியல் ஒன்றொரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலைத்தேச வானியலைப் போலவே எமக்கென்றொரு கீழைத்தேச வானியல் இருக்கிறது. அது பற்றிய விளக்கங்களை இந்நூலில் குறிப்பிட்டுக் காட்டவுள்ளேன்.




 


Wednesday, December 31, 2025

விமர்சனம் : ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் - கருணாகரன்

 நூல் : ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்

ஆசிரியர் : கருணாகரன்

வெளியீடு : மகிழ்


​'ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்' தொகுதியின் பின் இரண்டாவதாக வெளிவரும் கருணாகரன் கவிதைகளின் தொகுதி 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.'

​சூழல் தொடர்பான ஆழ்ந்த பார்வையும், ஆன்ம தேடலும், சுய விழிப்பும் மிக்கவை கருணாகரனின் கவிதைகள். மனதோடு நெருங்கிய சொற்களால் வசீகரிக்கும் வார்த்தைக் கோர்வைகளால் ஆன்மாவைச் சுண்டியிழுக்கும் தன்மை கொண்டவை அவை. இத்தொகுதியிலும் அத்தகைய 29 கவிதைகள் நிறைந்திருக்கின்றன.

​போரும், அழிவுகளும், இடப்பெயர்வும், இடர்களும் நிறைந்த எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைச் சிதறடித்த காலச்சூழலில் விளைந்த மனவுணர்வுகளே பல கவிதைகளின் தொனிப்பொருள். 'இருள் விரிவு' என்ற கவிதை இப்படிப் பேசுகிறது:

​"பூக்கள் உதிர்ந்து

காற்றில் சருகுகள் பறக்கின்றன

குழந்தைகள்

ஊஞ்சலை இழந்தார்கள்

வானம் நட்சத்திரங்களை இழந்தது

தென்னைகளை வருட முடியாத காற்று

சுடுகாட்டின் சாம்பலை

அள்ளி வீசுகிறது

அகதிக் காலங்களைத் தள்ள முடியாமல்

மாய்ந்து கொண்டிருக்கிறேன் நான்."


​அதேபோல 'நீலம் உரித்த வெண்மை' கவிதையில்

'ஒரு குழந்தையின் கதறல்

எல்லா இசைக் கருவிகளையும் சிதறடித்த பின்

இசையின் நினைவலைகளில்

ஊடுருவிச் செல்கிறது எரிக்கல்லாக' 

​என்கிறார் கவிஞர். போரின் நீள் துயர அனுபவங்களை இவ்வாறு கலாபூர்வமாக அநேக கவிதைகள் பேசுகின்றன.

​இந்தத் துயரங்களிலிருந்து மீள அவாவும் குரலாயும் இவரது கவிதைகள் ஒலிக்கின்றன.

 'போரின் துயரொலியும் கடும் வலியும் வாழ்வின் இடிபாடுகளும் பிரமைகளில் நிறைந்திருக்கின்றன. இந்தப் பிரமைகள் அகலவேண்டும். மெய்யாய் அகலுவதாய் அது இருக்க வேண்டும். மெய்யாகவே சமாதானத்தை விரும்பும் குரல் நமது.'

​'அது அலைக்கழிக்கப்படாத சமாதானம், ஏமாற்றப்படாத சமாதானம், சூதற்ற சமாதானம் நமக்கு வேண்டுமென்று கேட்கிறது.' என முன்னுரையில் அவர் குறிப்பிடுவது கவிதைகளிலும் உள்நின்று ஒலிக்கிறது.

​'மாமிசக் கனவும்

நெருப்பின் ஞாபகமும்

இல்லாத காலம் மலரும் நாளை

உணருகின்றேன்"


​என்று 'ஒரு பயணியின் குறிப்புரை' கவிதையில் அவர் குறிப்பிடுவது அவரது துயரங்களிலிருந்து மீள அவாவும் குரலே எனலாம். யாருடைய வீடு, ஆடுகளற்ற உலகம், சிறகுவெளி, அழகு, திரை, மரணத்தின் ருசி, பிரதிபலிப்பான்கள் பற்றி மேலும் சில உண்மை முகம் ஆகிய கவிதைகள் தொகுதியின் ஏனைய கவிதைகளின் தொனியிலிருந்து மாறுபட்டவை; தத்துவார்த்தப் பின்னணி கொண்டவை.

​எனது வருகை, விழியோடிருத்தல் ஆகியன இத் தொகுதியின் நீண்ட கவிதைகள், வித்தியாசமான பரிமாணத்தில் அரசியல் பிரச்சினையைப் பேசுவன. எனினும் இக்கவிதைகள் கட்டிறுக்கத்தையும், உரத்த தொனிப்பையும் இழந்து உதிரிக் கோவைகளாய் தென்படுகின்றன.

​நிகழ்காலத்தின் சம்பவங்களை கலா பூர்வமாகப் பதிவு செய்வனவாக இத் தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் அமைகின்றன. தேசிய விடுதலைப் போரின் நியாயப்பாட்டைச் சுட்டும் அதேவேளை, போரின் கொடிய கரங்கள் மக்களின் கிராமங்களை வாழ்வைப் பிடுங்கியெறிந்த அவலத்தையும் எடுத்துக் காட்டுகிறார். 'தீயயாயும் நிழலாயும்' முதலான கவிதைகள் விடுதலைத் தீயில் ஆகுதியயான வீரர்களைப் பேசுகின்றன.

​மகிழ் வெளியீடாக 90 பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் அதன் உள்ளடக்கம் போலவே உருவத்திலும் அழகும், வித்தியாசமும், சிறப்பும் உடையதாய் விளங்குகிறது.

இயல்வாணன்
உதயன் 01/06/2003

Friday, June 13, 2025

யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகள்

 யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகள்

இயல்வாணன்



ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். மலைகளில் திரளும் மேகம் ஒடுங்கி மழையாகப் பொழிந்து, அந்த நீர் அருவியாகப் பாய்ந்து, அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஆறாகி, அந்த ஆறு தான் போகும் இடங்களுக்கு அழகையும் செழிப்பையும் கொடுத்துச் செல்லும். காவியங்கள் யாவற்றிலும் நதிகள் பிரதான பகைப்புலமாகவும், பாடுபொருளாகவும் இருந்துள்ளன. இராமாயணத்தில் சரயு நதியும் கங்கை நதியும் பிரதானமாக வருகின்றன. வான்மீகி இராமாயணத்தில் 49 நதிகள் பாடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் காவிரி நதி வருகின்றது. மதுரைக் காஞ்சியில் வைகைநதி வருகிறது. ஈழத்து இலக்கியத்தில் மகாவலியும், களனி கங்கையும் மாணிக்க கங்கையும் வந்துள்ளன.

‘பூங்குறிஞ்சி முகட்டினிலேறி பொழிந்த தௌ;ளமு தாகிய வெள்ளம் பாங்கிலாத பரத்தையை நாடி படருவோரிற் பரந்தது பள்ளம்’ என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மலையிலிருந்து அருவி தவழ்ந்து வந்து ஆறு உருவாவதை விபரிப்பார். தனித்த தீபகற்பமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் இத்தகைய மலையருவி ஆறுகள் எவையுமில்லை. 

யாழ்ப்பாணத்தில் கீரிமலை, கம்பர்மலை, கதிரமலை என்று மலையில் முடிகின்ற இடங்கள் இருப்பினும் இவை மலை என்று சொல்லக்கூடிய தகுதியைக் கொண்டிருப்பனவல்ல. ஒரு பிட்டியாக, மேடாக இருந்ததால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம். அவ்வளவுதான். ஆற்றை உருவாக்கும் மலைகள் இல்லாவிடினும் ஆறில்லா ஊராக யாழ்ப்பாணம் இருக்கக்கூடாதென எமது முன்னோர்கள் கருதினரோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகளைச் சொல்லிக் கொள்கின்றனர்.  தொண்டைமானாறு, உப்பாறு, வழுக்கையாறு என்பனவே அவை மூன்றுமாகும்.

தொண்டமானாறு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கே வடமராட்சி கிழக்கில் உள்ள ஆழியவளையை அடுத்துள்ள மண்டலாய் என்னுமிடத்தில் ஆரம்பமாகும் தொண்டமானாறு மருதங்கேணி, செம்பியன்பற்று, நாகர்கோவில், அம்பன், குடத்தனை ஆகிய ஊர்களையும் வளப்படுத்தி, முள்ளிப் பாலத்தை ஊடறுத்து மண்டான் வழியாக முப்பது மைல்கள் ஓடி தொண்டமானாறு என்ற பெயருடைய ஊரில் அக்கரை கடற்கரையை அண்டி கடலில் கலக்கிறது. இது உப்புநீரைக் கொண்டது. இதன் நீர்ப்பரப்பு 7300 ஏக்கர் அளவுடையதாகும். தொண்டைமானாறு, தொண்டைமன்னன் வடிகால் என்றும் இது அழைக்கப்படுகிறது. வல்லி நதி என்ற பெயரும் இதற்குண்டு. புகழ்பெற்ற செல்வச் சந்நிதி ஆலயம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

திருச்செந்தூரில் இருந்து முருகப்பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரபுரிக்கு சூரபன்மனிடத்து தூது அனுப்பியதாகவும், வீரவாகுதேவர் இலங்கையின் வல்லிநதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் என்றும், மீண்டும் திரும்பிச் செல்வதற்கு இதே இடத்துக்கு வந்த போது சந்திக் காலம் ஆகிவிட்டது என்றும், அதனால் முருகப்பெருமானுக்குரிய சந்திப் பூசையை இந்த இடத்தில் செய்தார் என்றும், அந்த இடமே சந்நிதியாக மருவி இன்று செல்வச்சந்நிதி முருகன் ஆலயமாகத் திகழ்கிறது என்றும் ஆலய வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

பண்டிதர் சச்சிதானந்தன் எழுதிய யாழ்ப்பாணக் காவியம் 3 பருவங்கள் 38 படலங்கள் 278 பக்கங்கள் கொண்ட உயரிய காவியமாகும். அக்காவியத்திலும் தொண்டமானாறு வருகின்றது. கனகசிங்கையாரியனின் புதல்வர்கள் பரராசசேகரனும், செகராசசேகரனும் தமிழ்நாட்டில் கரந்துறைந்து போர்ப்பயிற்சிகள் பெற்று தொண்டமானாற்றின் அருகே சின்னமலை என்ற இடத்திலேயே வந்திறங்குவதாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

தொண்டைமான் என்ற மன்னன் இந்தப் பகுதியில் விளையும் உப்பினை மரக்கலங்களின் வழியாக எடுத்துச் செல்வதற்கும், உள்ளுர் போக்குவரத்துக்குமாக இதனை வெட்டியதாகவும் கர்ணபரம்பரைக் கதைகளாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தொண்டமானாறு முக்கிய பங்காற்றுகிறது. யாழ்ப்பாணத்துக்கான குளம் என்ற குடிநீர்த் திட்டத்தை தொண்டமானாறு ஆற்றை இடைமறித்து நீரைத் தேக்கி ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உப்பாறு

பெயருக்கேற்ப உப்புநீரைக் கொண்டுள்ள இவ்வாறு புத்தூருக்கும் சரசாலைக்கும் இடையே அமைந்துள்ள கப்புதூ என்ற இடத்தில் ஆரம்பமாகி, 12 மைல் தூரம் ஓடி நாவற்குழியில் கடலில் கலக்கிறது. இதனுடைய நீர்ப்பரப்பு 6400 ஏக்கரகும். வெள்ளநீர் வெளியேற்றத்துக்கு பயன்படும் இவ்வாற்றில் மழைகாலத்தையண்டிய குறித்த காலப்பகுதியில் மீன்பிடி நடைபெறும். மழைக்காலத்தில் வண்ணாத்திப் பாலம், கோப்பாய் பாலம், நாவற்குழிப் பாலம் ஆகியவற்றின் கீழாக இவ்வாறு பாய்கிறது.

வழுக்கையாறு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு நன்னீர் ஆறு வழுக்கையாறு. ஒரு வாய்க்கால் அளவுக்கு இன்று சுருங்கிப் போயுள்ள இந்த ஆறு அளவெட்டி பினாக்கைக் குளத்தில் ஆரம்பமாகி ஆறு மைல்கள் பயணித்து அராலியில் கடலில் கலக்கிறது. ‘யாழ்ப்பாண மாதா மலடியென்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சை மூலம் பெற்றெடுத்த குழந்தையிது’ என்று இரசிகமணி கனக செந்திநாதன் இவ்வாற்றின் பிறப்பைப் போற்றுவார்.

தெல்லிப்பழை, அம்பனை, பன்னாலை பிரதேசங்களில் மழைக்காலத்தில் சேரும் உபரிநீர் அளவெட்டிப் பினாக்கைக் குளத்தை வந்தடையும். பினாக்கைக்குளம் நிறைந்தவுடன் வழுக்கையாறு ஆரம்பமாகி பெருமாக்கடவை, கந்தரோடை, சங்குவேலி, சண்டிலிப்பாய், நவாலி வழியாக உள்ள குளங்களையும் நிறைத்து அராலியைச் சென்றடைகிறது.

இலக்கியத்தில் சிறப்புப் பெற்ற ஆறாகவும் இது விளங்குகிறது. செங்கை ஆழியான் எழுதிய ‘நடந்தாய் வாழி! வழுக்கியாறு’ என்ற நடைச்சித்திரத்தின் மூலமே இது இலக்கிய ஆவணமாகியுள்ளது. சிரித்திரன் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் கதைக்களம் வழுக்கியாறு ஆரம்பமாகும் இடத்தில் இருந்து முடிவுறும் இடம்வரை இடம்பெற்றுள்ளது. தொலைந்த மாட்டைத் தேடும் படலமாக ஆரம்பிக்கும் இந்நடைச்சித்திரம் ஒரு குறுநாவல் போல சம்பவ விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது. இயல்வாணனால் கவிதையொன்றும் இவ்வாறு தொடர்பில் எழுதப்பட்டுள்ளது.

கந்தரோடையை மையமாகக் கொண்டு கதிரமலை இராச்சியம் நிலைபெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. உக்கிரசிங்கன் என்ற மன்னன் கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்து வந்தான் என்றும், இலகுவான போக்குவரத்துக்காக இந்த வாய்க்கால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழுக்கையாற்றுப் படுகையில் தொல்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலங்களில் நீரைச் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் வெள்ளநிலைமை, பயிரழிவு, மலேரியா முதலான நோய்களின் தாக்கம் காரணமாக வெள்ளநீரை கடலுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 90ஆயிரம் ஏக்கர் அடி நீர் ஒரு மழையாண்டில் கிடைப்பதாகவும், அதில் 40ஆயிரம் ஏக்கர் அடி நீர் விவசாயம், குடிநீர், இதர தேவைகளுக்குப் பயன்படுவதாகவும், 50ஆயிரம் ஏக்கர் அடி நீர் வீணாக கடலில் புகுவதாகவும் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அத்தகைய உபரி நீரைக் கடலுக்கு அனுப்புவதில் இந்த மூன்று ஆறுகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன.


ஆறே! வழுக்கை நீ வாழ்க!

ஓடும் மேகம் ஒன்றாகி மலையில் 

கூடும் வண்மை கண்டிலையே!

மூடும் பாறை மேலே ஊற்றாய்

பீறும் தகையும் கொண்டிலையே!

காரும் கறுத்து வானிடிய மழை

தூறும் பொழுதில் நீயுயிர்ப்பாய்.

பேரும் கொண்டாய் ஆறெனவே

பெருந்தாய்! வழுக்கை; நீ வாழ்க.


மண்ணும் குளிரவுன் மடி பெருக்கும்

மெல்ல நடந்து சென்றிடுவாய்.

நண்ணும் கரையின் சுற்றந் தழுவி

நுரைத்துச் சிரித்துச் சென்றிடுவாய்.

பொன்னும் பொருளும் சீர் கொண்டு

போவாய் ; காதற் கடல் சேர

வண்ணங் கொண்டெமை வளமூட்டும்

வடிவே! வழுக்கை; நீ வாழ்க.


பாதை மருங்கில் அணி வகுத்துப்

பூத்துக் குலுங்கும் மரக்கூட்டம்

தாதை இறைத்து மணமூட்டும்

தழுவிக் காற்று தாலாட்டும்

கோதையர்கள் குருகி னங்கள்

குளித்துப் புரள்வர் உன்மடியில்

ஓதை உனதோ? கோதையதோ?

ஓதாய்! வழுக்கை; நீ வாழ்க.


ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் முதுமொழியை

அழித்து யாழ்ப்பாண மங்கைக்கு

பேறாய் உதித்துப் பேர் போக்கினையே!

பேரரசு கதிரமலை நிலைநிற்க எல்லைச்

சீராய் நின்றாய்! உக்கிரசிங்க மன்னன்

நாவாய் நகர்ந்து பொருள் தேட

ஆறானாய்! வளநகராய் ஆக்கும் நல்ல

சூரானாய்! வழுக்கை; நீ வாழ்க.


அம்பனை வெளியின் நீர் சேர்ந்து

ஆடிப் பினாக்கைக் குளஞ் சேர

வந்தனை; பெருமாக் கடவையின் வழியே

கந்த ரோடையில் இளைப்பாறி - மெல்லச்

சங்குவேலியுள் நுழைந்து வயல் விரித்த

சண்டிலிப்பாயில் உறங்கி எழுந்து

சங்கரத்தையில் ஏறி அராலியில் நுழைந்தாய்

காணலையே! வழுக்கை; நீ எங்கே?


இயல்வாணன்

    கலைநிலம் வலி.தெற்கு கலாசார பேரவை மலர் 2018


யாழ்ப்பாணத்தின் வற்றாத நீரூற்றுகள்

 யாழ்ப்பாணத்தின் வற்றாத நீரூற்றுகள்

இயல்வாணன்



இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடும் மன்னாரில் இருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளும் சுண்ணாம்புக்கல் எனப்படும் படிவுப்பாறைகளால் ஆனது. இவை மயோசீன் என்றழைக்கப்படும் புவிச்சரிதவியல் காலத்தில் உருவானவை என புவிச்சரிதவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களின் சுவடுகள் தரையில் படிந்து நீண்டகால இரசாயன மாற்றத்துக்கு உட்பட்டு சுண்ணாம்புக் கற்பாறைகள் உருவாகின. இப்பாறைப் படைக்கு மேலாக பாறைகள் சிதைவடைந்து உருவான மண்படை காணப்படுகிறது. இப்படை ஓரிரு அடிகளில் இருந்து 30 அடி ஆழம் வரை காணப்படுகிறது.

சுண்ணாம்புக் கற்பாறைகள் நுண்துளைகளைக் கொண்டவை. நீரைக் கசியவிடும் தன்மையுடையன. அத்துடன் வெடிப்புகள், மூட்டுகளையும் கொண்டிருக்கின்றன. மழை பெய்யும் போது அந்த நீரானது இவற்றினூடாக கீழிறங்கி தரைக்கீழ் நீராகத் தேங்கிப் பரவலடைகின்றது. சுண்ணாம்புக் கல் என்பது கல்சியம் காபனேற்று என்ற இரசாயனப் பெயரால் அழைக்கப்படுகிறது. 

மழை பெய்யும் போது மழைநீரில் உருவாகும் மென் காபோனிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் காரத்தன்மையுடைய பதார்த்தங்களில் தாக்கம் செலுத்தும் போது பாறைப் படைகளில் அரித்தல் அல்லது தின்னல் செயன்முறை நடைபெறுகிறது.

இத்தின்னல் மற்றும் அரித்தல் செயன்முறை காரணமாக படை படையாகவுள்ள மேற்பகுதி இடிந்து விழ புனற்பள்ளங்கள் என்ற நிலவுருவங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான நிலவுருவங்களில் தேங்கியுள்ள நீரானது வற்றாத தன்மையுடையதாக இருக்கின்றது. இவ்வாறான நிலவுருவங்கள் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ளன. இவற்றை வற்றாக் கிணறுகள் என அழைக்கிறோம். 

நிலாவரை

அத்தகைய வற்றாத கிணறுகளில் முதன்மையானது நிலாவரைக் கேணியாகும். இது யாழ்ப்பாணத்தில் இருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் இராசபாதை வீதி முடிவடையும் இடத்தில் நவக்கிரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது விளங்குகிறது.

இது எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் கர்ணபரம்பரைக் கதையொன்றுள்ளது. இராமாயண காலத்தில் இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்திருந்தான். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வானரப்படை இராமர் அணையெனப்படும் சேதுபாலத்தை அமைத்தது. அதன்வழியாக தனது பரிவாரங்களுடன் இராமபிரான் இலங்கைக்கு வந்தார். அவ்வப்போது வானரப் படைக்கு தாகம் எடுத்த போது இராமபிரான் தனது தோளில் தொங்கிய அம்பை எடுத்து வழி வழியே குத்திச் சென்றார். குத்திய இடத்தில் நீர் பீறிட்டு எழுந்தது. அவ்வாறு இராமர் குத்திய ஒரு இடமே நிலாவரையாகும். அது போலவே பொக்கணை, வில்லூன்றி என்பனவும் உருவாகின என்கிறது இச்செவி வழிக் கதை.

நிலாவரை கடல் மட்டத்தில் இருந்து 0.25 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 52அடி நீளமும் 37 அடி அகலமும் கொண்ட நீள் சதுரவடிவில் அமைந்த இந்த கேணி போன்ற நீர்நிலை ஆரம்பத்தில் எவ்வளவு ஆழம் கொண்டது என்று அறியப்படவில்லை. அதனால் வானத்தில் உதிக்கும் நிலா வரையான தூரமளவுக்கு ஆழம் இருக்கும் என்று கருதியதால் நிலாவரை என அழைக்கப்பட்டதாகக் கூறுவர். 

இது 164 ½ அடி ஆழமுடையது என முன்னர் சங்கிலிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். மேற்பரப்பில் இருந்து 50 அடி வரை நன்னீரைக் கொண்டது. 50 முதல் 80 அடி வரை சவர் நீரையும், 80 முதல் 130 அடி வரை கடல்நீரையொத்த உப்புநீரையும், 130 அடியின் கீழே கடல்நீரை விடக் காரமான உப்புநீரையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 1824ஆம் ஆண்டில் அப்போதய அரசாங்க அதிபராயிருந்த பேர்சிவல் ஒக்லன்ட்டயிக்கின் (Pநசஉiஎயட  யுஉமடயனெ னலமந) காலத்தில் நிலாவரைக் கேணியின் ஆழம், நீர் வற்றும் வேகம் என்பவற்றைக் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீராவியால் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீர் இறைக்கப்பட்டது. 8 நாள்களாக நீரிறைத்தும் நீர் வற்றவில்லை. 1946ஆம் ஆண்டில் அதிகவலுக் கொண்ட நீரிறைக்கும் இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கலன் வீதம் ஒரு வாரத்துக்கு நீரிறைக்கப்பட்டது. ஆயினும் நீர் வற்றவில்லை. ஆனால் நீரின் தடிப்பில் மாற்றம் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

2016ஆம் ஆண்டு கடற்படை சுழியோடிகள் மற்றும் ரோபோவின் உதவியுடன் ஆழம், நீரின் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 55.5 மீற்றர் அல்லது 182 அடி ஆழமானது எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் நீண்ட காலத்துக்கு முன்னர் விழுந்திருந்த மூன்று மாட்டு வண்டில்கள் அடியில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் நிலத்தடி நீரோட்டங்களுடனான தொடர்பும் கண்டறியப்பட்டது. நாலாதிசைகளிலும் வேகமானதும், மிதமானதுமான நீரோட்டங்கள் கண்டறியப்பட்டன. முன்னைய காலத்தில் நிலாவரையில் தேசிக்காய் போட்டால் கீரிமலையில் அதை எடுக்கலாம் எனக் கூறக் கேட்டிருக்கிறோம். அதனை மெய்ப்பிப்பது போல இந்த நீரோட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரைக் கிணற்றில் இருந்து அயற் பிரதேசங்களின் விவசாய நடவடிக்கைக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னர் அதனை தொல்பொருள் திணைக்களம் கையேற்றதைத் தொடர்ந்து அது நின்று போனது. குறைந்தளவு பிரதேசத்துக்கு நிலாவரை மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளலாம். வல்லை வெளியின் தென்பகுதியை மண்ணிட்டு நிரப்பி மாகாண அரச நிறுவனங்களையும் குடியிருப்புத் தொகுதிகளையும் அமைக்கலாம்.  அந்த இடத்துக்கான நீராதாரத்தை நிலாவரையில் இருந்து குழாய் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பொக்கணை

சுன்னாகத்தில் இருந்து ஊரெழு நோக்கிச் செல்லும் திலீபன் வீதியில் உள்ளது பொக்கணை என்னும் வற்றாத நீரூற்றாகும். இது யாமா எனவும் அழைக்கப்படுகிறது. சிறிய பள்ளமாக பொந்து போலக் காணப்படும் இதற்குள் இருக்கும் நீர் வற்றுவதில்லை. தற்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் குழாய்கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து பெறப்படும் நீர் குழாய் வழியாக மானிப்பாய், கந்தரோடை, கட்டுடை, நவாலி முதலிய இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.  

முன்னர் காற்றாடி மூலமான நீரிறைக்கும் செயற்பாடும், நீர்த்தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் செயற்பாடும் இடம்பெற்று வந்ததாகவும், யுத்தகாலத்தில்  இச்செயற்பாடு நின்று போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழைகாலத்தில் வெளியில் உள்ள மழைநீர் இதற்குள் புகுந்து மறைந்து விடும். புயல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் போதும் வெள்ளப்பெருக்கின் போதும் இதற்குள் இருந்து நீர் பொங்கிப் பிரவகிப்பதையும் காண முடியும்.

 பொக்கணை பற்றி ஊரில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு கதை உள்ளது. அருகில் உள்ள ஆலய பூசகர் பொக்கணையின் அடியில் தங்கத்தினாலான சூலம் இருப்பதாகக் கனவு கண்டார். அதனை அவர் ஊர் மக்களிடம் கூறியிருந்தார். அதனைக் கேட்ட ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் மூழ்கிச் சென்று பார்த்து விட்டு மேலெழுந்து வந்து “ஒரு சூலம் இருக்கிறது. அதைச் சுற்றி பாம்புகள் இருக்கின்றன. கீழே பெரிய ஆறு ஓடுகிறது” என்று கூறினார். மீண்டும் மூழ்கி சூலத்தை எடுத்து வரச் சென்றவர் மீண்டு வரவில்லை.

இடிகுண்டு 

நவாலியில் உள்ள கிராய் என்ற பகுதியில் வயல்நிலங்களுக்கு அருகே ஒரு குட்டை போலுள்ள வற்றாத நீரூற்று இடிகுண்டாகும். “இது 1905ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆந் திகதி விடிகாலையில் உருவானது. திடீரென்று இடி இடிப்பது போல பெருஞ் சத்தம் கேட்டது. நிலம் இடிந்து விழ ஒரு அடி உயரத்துக்கு உப்புநீர் கொந்தளித்து எழுந்தது. மாலையில் அந்நீர் வற்றிவிட அந்த இடத்தில் 10 அடி அகலமும், 30 அடி நீளமும் 30 அடி ஆழமும் கொண்ட கேணி உருவானது” என பொன்னையா மாணிக்கவாசகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். வீதியோரமாக  அதனை இன்றும் காணலாம்.

அல்வாய் மாயக்கை குளம், குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு என்பனவும் வற்றாத நீர்நிலைகளாகும்.

தாய்வீடு கனடா



நேர்காணல் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

 நேர்காணல்

பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

நேர்கண்டவர், படங்கள் : இயல்வாணன்

சு.வே. என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை நாவற்குழியில் பிறந்தவர். 1921ஆம் ஆண்டு மே மாதம் 4ஆந் திகதி சுப்பிரமணியம் - தையல்நாயகம் தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் பிரம்மச்சாரியத்தைக் கைக்கொண்டவராக, தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஈழத்தில் உருவகக் கதை முன்னோடியாகக் கருதப்படும் இவர் சிறுகதை, கட்டுரை, நாடகத்திலும் முத்திரை பதித்த ஒருவராவார். கல்வித் திணைக்களத்தின் பாடநூல் எழுத்தாளராக இருந்த இவர் துணைப் பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் எழுதியவராவார். 84 வயதில் முதுமையும் நோயும் தளர்வடையச் செய்திருந்த நிலையில் அவரை நாவற்குழியில் சந்தித்தேன். பேசுவதற்கும், கடந்த காலச் சம்பவங்களை ஞாபகத்தில் கொள்வதற்கும் சிரமப்பட்ட நிலையிலேயே இந்நேர்காணலைப் பதிவு செய்ய முடிந்தது.

அவரது உறவினரான எஸ்.தங்கராசா உடனிருந்து கூறிய கருத்துகளும், அவர் பற்றிய ஆய்லுக் கட்டுரையும் நேர்காணலைப் பூர்த்தி செய்ய உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: உங்களது வாழ்க்கை இளந் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக இருக்கும். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்: இயற்கையழகு மிகுந்த நாவற்குழி எனது ஊராகும். எனது தந்தையார் ஒரு விவசாயி. புராண படனத்திலும், பிரசங்கத்திலும் தேர்ச்சி பெற்றவர். குடும்பத்தில் மூத்த பிள்ளையாக நான் பிறந்தேன். இரண்டு தம்பியரும், இரண்டு தங்கைகளும் எனது உடன்பிறப்புகள்.



இன்றைக்கு நாவற்குழி மகா வித்தியாலயமாக இருக்கின்ற C.M.S பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றேன். இடைநிலைக் கல்வியை கோவிலாக்கண்டி மகாலக்சுமி வித்தியாலயத்தில் தொடர்ந்தேன். எட்டாம் வகுப்பிலிருந்து இன்றைய டிறிபேக் கல்லூரி எனப்படும் சாதனா பாடசாலையில் படித்தேன். அங்கு சிரே~;ட பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்வதற்கு முன்னுள்ள இரண்டாண்டு இடைவெளியில் கைதடி சி.எம்.எஸ். பாடசாலையில் ஆங்கிலம் கற்றேன். அங்கு தலைமையாசிரியராக இருந்த பரமசாமி என்பவரது தூண்டுதலின் பேரில் திருநெல்வேலி காவிய பாடசாலையில் பாலபண்டித வகுப்பில் சேர்ந்து பரீட்சையில் சித்தியடைந்தேன்.

இக்காலப் பகுதியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1939இல் சைவாசிரிய கலாசாலையில் பிரவேச பணடிதர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, தெரிவான 1 பேரில் நானும் ஒருவனானேன். 

அங்கு பண்டிதமணியிடம் தமிழும், மகாமுனிவரெனப் போற்றப்படும் சிந்தனைச் செல்வர் அளவெட் பொ.கைலாசபதியிடம் சமயமும் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. கைலாசபதி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு மெய்ப்பொருள் அடிப்படையில் புதிய வியாக்கியானம் செய்தவர். அதேபோல பண்டிதமணி அவர்களது இலக்கிய நயப்பு உன்னதமானது.

இவர்கள் இருவரிடமும் கற்கக் கிடைத்தது நான் பெற்ற பெரும் பேறாகும். இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்துக்கு இவர்களது வழிகாட்டலே துணை நின்றதென நம்புகிறேன்.

1942ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினேன். பயிற்சி முடிந்தாலும் உடனே தொழில் தேட முடியாது. நான்காண்டுகள் வேலை தேடி முயற்சி செய்தேன். இக்காலத்தில் நாவற்குழியில் சைவவித்தியாவிருத்திச் சங்கம் ஒரு பாடசாலையை நிறுவியது. அங்கு வேதனமின்றிச் சிலகாலம் பணியாற்றினேன். 

1946இல் ஹற்றனிலுள்ள டிக்கோயா டங்கெல்ட் உதவி நன்கொடை பெறும் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினேன். 1949இல் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கொ பாடசாலையில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தேன். சுன்னாகம் திருஞான சம்பந்த வித்தியாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பணியாற்றினேன். இப்போது ஓய்வுநிலையில் உள்ளேன்.

கேள்வி : நீங்கள் ஓர் ஆசிரியராக மட்டுமல்ல பாடநூல் எழுத்தாளராகவும் கடமையாற்றியிருக்கிறீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்  : சுன்னாகத்தில் நான் பணியாற்றிய போது திருமகள் அழுத்தகம், தனலக்சுமி புத்தகசாலை ஆகியவற்றின் தொடர்பு ஏற்பட்டது. அங்கு முகாமையாளராக இருந்த அப்புக்குட்டி மற்றும் பண்டிதர் வ.நடராசா, மு.சபாரத்தினம் ஆகியோரின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. இத்தொடர்பின் விளைவாக 5ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘சந்திரமதி’, 7ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘குகன்’ ஆகிய இரு சிறுவர் இலக்கிய நூல்கள் என்னால் எழுதப்பட்டன. எனது முதல் நூலாக்க முயற்சிகளாக இவற்றைக் குறிப்பிடலாம்.

அதன்பின்உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டியாக ‘நாற்பது கட்டுரை மஞ்சரி’ என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதி வெளியிட்டேன். அத்துடன் பண்டிதர் வ.நடராசாவுடன் இணைந்து தமிழ் மொழிப் பயிற்சி நூல்களையும் எழுதினேன்.

1966இல் அப்போதய கல்வி அமைச்சரின் திட்டத்துக்கமைய அரச பாடசாலைகளுக்கான பாடநூல்களை எழுதும் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்ப் பாடநூல்களை எழுதும் ஒரு குழு பலாலி ஆசிரியர் கலாசபலை அதிபர் கந்தசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பண்டிதர் க.சச்சிதானந்தன், கவிஞர் அம்பி(இ.அம்பிகைபாகன்), கந்தப்பு ஆகியோருடன் நானும் இடம்பெற்றிருந்தேன்.

காலத்துக்குக் காலம் ஆள்கள் மாறிய நிலையில் இயங்கிய பாடநூலாக்கக் குழுவில் நான் 1981 வரை தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளேன். பல்வேறு அறிஞர்களுடன் குழுவாக இயங்கப்பெற்ற அனுபவம் எனக்குக் கிடைத்திருந்தமை பெருமையும் மனநிறைவும் தரும் விடயங்களாகும்.

கேள்வி : ஆக்க இலக்கியச் சூழலுக்குள் எவ்வாறு உங்களது பிரவேசம் நிகழ்ந்தது?

பதில் : நான் முன்னர் கூறிய அம்சங்களும் இவ்வினாவுக்கான விடையாகும்.  நான் ஹற்றன் புனித பொஸ்கோ பாடசாலையில் கற்பித்த வேளை அங்கு நாடகப் பிரதிகளை எழுதுதல், நெறிப்படுத்தி மேடையேற்றல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். அப்பாடசாலையின் ஆண்டு மலரில் பாடசாலை வரலாற்றை பொஸ்கோ புராணம் என்ற பெயரில் கவிதை வடிவில் பாடியிருந்தேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இருந்தவேளை நாடகப் பிரதிகள் பலவற்றை எழுதியிருந்தேன்.

எனினும் 1943இல் ஈழகேசரியில் எழுதிய ‘கிடைக்காத பலன்’ என்ற சிறுகதையுடனேயே எனது இலக்கியப் பிரவேசம் ஆரம்பமாகியதெனலாம். ஈழகேசரி, இந்துசாதனம் முதலான பத்திரிகைகளைப் படித்த அருட்டுணர்வும், கனக செந்திநாதன், வரதர், நாவற்குழியூர் நடராசன், சு.இராஜநாயகன், த.தியாகராசா முதலான இலக்கிய நண்பர்களின் தொடர்பும் எனது இலக்கியப் பிரவேசத்துக்குத் துணை செய்துள்ளன. ஈழகேசரி, கலைச்செல்வி, வீரகேசரி ஆகியவற்றில் எனது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. ‘மண்வாசனை’ என்ற சிறுகதைத் தொகுதி 1972இல் திருமகள் அழுத்தகத்தால் வெளியிடப்பட்டது. இவற்றுடன் 6 கதைகளை இணைத்து ‘பாற்காவடி’ என்ற தொகுப்பை 2002இல் யாழ்.இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.

கேள்வி : ஈழத்து நாடகத்துறையில், குறிப்பாக வானொலி நாடக எழுத்தாக்கத்தில் உங்களுடைய பங்குபணி குறித்து விதந்து கூறப்படுகிறது. உங்களது நாடக ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

பதில் : ஆசிரியராகப் பணியாற்றிய போது பாடசாலையிலும், போட்டிகளிலும் பல நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி மேடையேறியுள்ளேன். அதுவே வானொலி மற்றும் மேடை நாடகங்களை உருவாக்க வழிகோலியது. இலங்கை கலைக்கழகத்தால் நடத்தப்பெற்ற முழுநீள நாடகப் போட்டியில் வஞ்சி, எழிலரசி ஆகிய எனது நாடகங்கள் முதற்பரிசைப் பெற்றன. அதுபோல இலங்கை வானொலி நாடகப் போட்டியில் ‘மண்வாசனை’ என்ற நாடகம் முதற் பரிசைப் பெற்றது. ‘ஒருமைநெறித் தெய்வம்’ நாடகமும் பரிசு பெற்றுள்ளது.

வானொலியில் பல தொடர் நாடகங்களை எழுதியுள்ளேன். ஏட்டிலிருந்து (16 வாரங்கள்), கிராம ராச்சியம்(32 வாரங்கள்), பொன்னாச்சிக்குளம்(97 அங்கம்) என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றை விடவும் பல நாடகங்களை எழுதியுள்ளேன். இவற்றின் பிரதிகள் கையில் இல்லை. ஞாபகத்திலும் இல்லை. திருக்குறட் சித்திரம் (36 வாரங்கள்), நாட்டுக்கு நல்லது(24 வாரங்கள்), இலக்கிய ரசனை(32 வாரங்கள்) ஆகிய உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் வானொலியை அதிகம் பயன்படுத்திய படைப்பாளிகளில் நானும் ஒருவன்.

கேள்வி : ஈழத்தில் உருவகக் கதையின் பிதாமகனாக உங்களைக் குறிப்பிடுகின்றனர். உருவகக் கதையின்பால் உங்களின் நாட்டம் சென்றது எவ்வாறு?

பதில் : இந்தியாவில் கலீல் ஜிப்ரான் உருவகக் கதையின் முன்னோடியாக விளங்கினார். வி.ஸ.காண்டேகர் உருவகக் கதைகள் புகழ் பெற்றவை. கலைமகள், கல்கி இதழ்களில் வெளிவந்த உருவகக் கதைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். 

எனது மண்ணின் நிலைக்களனில் நேர்பொருளில் கூறமுடியாதவற்றை உருவகப்படுத்திக் கூறுவதற்கு நான் முயன்றேன். இதுவே எனது உருவகக் கதைகளின் தோற்றத்துக்குக் காரணம். 

மணற்கோயில், வெறுங்கோயில், வனமுல்லை, சுதந்திரம், மனக்குருடு உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளேன். இவற்றை ‘மணற்கோயில’ என்ற தலைப்பில் 1999இல் நூலாக வெளியிட்டுள்ளேன்.

கேள்வி : ராஜாஜி போற்றிய உருவகக் கதையின் பிதாமகர் என எஸ்.பொன்னுத்துரையும், இரசிகமணி கனக செந்திநாதனும் உங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றிக் கூறுங்கள்.

பதில் :  எனது ஓர் உருவகக் கதையான ‘மணற்கோயில்’ கலைச்செல்வியில் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ‘சிற்பி’ சிவசரவணபவன் கலைச்செல்வி இதழ்களை அப்போது இந்தியாவின் கவர்ணர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும் அனுப்பி வந்தார். இக்கதை வந்து சில காலத்தின் பின் எழுத்தாளர் மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக அமரர்கள் க.தி.சம்பந்தனும், சு.இராஜநாயகனும் சென்னைக்குச் சென்றார்கள். அவ்வேளை அவர்களிடம் கல்கி ஆசிரியராக இருந்தவரும் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் தலைவருமான மீ.ப.சோமசுந்தரம் ராஜாஜி சு.வேயின் கதை பற்றி தன்னிடம் புகழ்ந்து கூறியதாக குறிப்பிட்டிருந்தார். ராஜாஜி பாராட்டினாரென்றால் அதற்கு சிற்பியே காரணகர்த்தா ஆவார்.

கேள்வி : இலக்கியம் பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : இலக்கியம் என்பது படிப்பவர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி அவர்களது பாவனாசக்தியை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி : இளந் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?

பதில் : நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். அனுபவங்களை உள்வாங்க வேண்டும்.அதன்பின் தான் வாழும் மண்ணின், இயற்கையின், மனிதர்களின் இயல்புத்தன்மையோடு எளிய நடையில் படைப்புகளை ஆக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும்.

உதயன் சூரியகாந்தி 12-09-2004






















சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன்

 சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன் 

சு.ஸ்ரீகுமரன்


தனது அறிவாற்றலையும் ஆளுமையையும் சமூக மேம்பாட்டுக்காக பயன் படுத்துபவர்கள்  சிலரே. அவ்வாறு தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமூகச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணித்த ஒருவராக அமரர் பொன்னுத்துரை கமலநாதன் விளங்குகிறார்.

13-05-1947இல் தாவடி என்ற கிராமத்தில் பிறந்த கமலநாதன் தனது ஆரம்பக் கல்வியை தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூ}ரியில் சேர்ந்து தட்டச்சு சுருக்கெழுத்து துறையில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தட்டெழுத்தாளராக நியமனம் பெற்று கடமையாற்றினார்.

சிறிது காலத்தின் பின்னர் அளுத்கம ஸாஹிரா கல்லூரியில் ஆசிரிய பணியினை ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் வர்த்தக பாடத்தில் ஆசிரிய பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். அத்துடன் ஸ்ரீஜெவர்த்தனபுர பல்கலைக்கழகம் வணிகமாணி சிறப்பு பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரிய நியமனம் பெற்று பகுதித் தலைவராகவும் உப அதிபராகவும் கடமையாற்றினார். இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி தரம் 1 அதிபர் நியமனம் பெற்று யூனியன் கல்லூரியிலேயே 1994இல் அதிபர் பதவியினையும் ஏற்றுக் கொண்டார். அடுத்து தான் கல்வி பயின்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி (1996-2007) அங்கேயே ஓய்வுபெற்றார். யூனியன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் தனது அர்ப்பணிப்பான சேவையினால் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அப்பாடசாலைகளை மிளிரச் செய்த பெருமை இவருக்குரியது.

படிக்கும் காலத்தில் கொக்குவில் கிழக்கு சனசமூக நிலையத்தில் பொருளாளராக இருந்துள்ளார். விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவர் நீண்ட காலம் பொருளாளராகவும் இருந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், அப்பாடசாலையின் நிதியங்கள் ஆகியவற்றிலும் இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம், சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் ஆலய தர்மகர்த்தா சபை, தென்சுன்னையூர் சிவபூதராயர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புகளின் பொருளாளராக கடமையாற்றியுள்ளார்.

சைவ பரிபாலன சபையின் தேர்வுச் செயலாளராக பல ஆண்டு காலம் பணியாற்றி இலங்கை முழுவதும் சைவநெறி மற்றும் தமிழ்மொழித் தேர்வுகள் நடைபெறவும், மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறவும் அயராது பாடுபட்டார். சுன்னாகம் சிவில் பாதுகாப்புக் குழு, சுன்னாகம் அரச மருந்தக நோயாளர் நலன்புரிச் சங்கம், செனட்டர் நாகலிங்கம் சிலை உருவாக்கக் குழு என ஒன்றல்ல இரண்டல்ல பல அமைப்புகளில் அவர் பொறுப்பான பதவியினை வகித்து சமூக சேவையினை ஆற்றியுள்ளார். இவரது சேவையினைக் கௌரவித்து சுன்னாகம் தெற்கு இந்து இளைஞர் மன்றம் சமூகச்சுடர் விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது.

தனது வணிகத்துறை அறிவை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்கி, பலரை உயர்த்தி வைத்த சிறப்பும் இவரைச் சாரும். இவரிடம் பயின்றவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். இவ்வாறு செயற்கரிய செய்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பொ.கமலநாதன்  25-06-2024 அன்று காலமானார். அவரது பூதவுடல் நீங்கி ஒரு வருடஞ் சென்ற போதும், அவரது சேவையும் கீர்த்தியும் என்றென்றும் அழியாது நினைவில் நிற்கும்.

uthayan 15-06-2025



சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம்

 

சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம் 

சு.ஸ்ரீகுமரன்

(சுன்னாகம் பட்டின சபையின் தலைவராக இருந்து சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய பெருந்தகையான அமரர் செனட்டர் நாகலிங்கத்தின் அளப்பரிய சேவையினை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக சுன்னாகத்தின் அன்பர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு திருவுருவச் சிலையினை நிறுவியுள்ளனர். அச்சிலையின் திறப்புவிழா இன்று 07-0-2025 சனிக்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

 வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலைக்கு அருகாக சுன்னாகம் பட்டினசபைத் தலைவராக இருந்து நகர நிர்மாணத்துக்கு முக்கிய பங்காற்றிய செனட்டர் பொன்னம்பலம் நாகலிங்கத்தின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வேளையில் செனட்டர் நாகலிங்கத்தின் பணிகளை நினைவுகூர்வது காலப் பொருத்தமாகும்.

14-01-1903அன்று தெல்லிப்பழையில் பிறந்த நாகலிங்கம் புகழ்பூத்த யாழ்ப்பாணக் கல்லூரியிலும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியிலும் கல்வியைக் கற்றார். தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்து சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் தோற்றி சிறப்பான வாதம் புரிந்து புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கினார். 

1924ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸில் ஸ்தாபக உறுப்பினராக இணைந்து கொண்டதுடன் இணைச் செயலாளராகவும் செயற்பட்டார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களிலும், சமூகநீதிப் போராட்டங்களிலும் பங்குபற்றினார். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமபந்தி போசனம், ஆலயப் பிரவேசம் போன்ற செயற்பாடுகளில் செயலூக்கத்துடன் பணியாற்றினார்.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் செயற்பாடுகள் செயலிழந்து போனதையடுத்து சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு இடதுசாரியாகச் செயற்பட்டார். ஒரு தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்த இவர் சிறந்த தொடர்பாடற் திறனைக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல் தலைவர்களாக விளங்கிய கொல்வின் ஆர்.டீ.சில்வா, லெஸ்லி குணவர்த்தன, என்.எம்.பெரேரா போன்றோருடன் நெருக்கமான உறவைப் பேணினார். இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை சுருட்டுத் தொழிலாளர் சங்கம், வடபிராந்திய பஸ் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருந்து தொழிலாளர் நலன்பேணும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.

தொழிலாளர் பிரதிநிதியாக லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1951 முதல் 1958 வரை செனட்டராக பதவி வகித்தார். செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தொழிற்சங்கவாதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்ற எல்லை மறுசீரமைப்பின் கீழ் உடுவில் கிராமசபையில் இருந்து சுன்னாகம் பட்டினசபை பிரிக்கப்பட்டு 1964ஆம் ஆண்டு ஜனவரி முதலாந் திகதியில் இருந்து செயற்பட்டது. சுன்னாகம் பட்டினசபையின் முதற் தலைவராக செனட்டர் நாகலிங்கம் பொறுப்பினை ஏற்றார். 1976இல் அச்சபை கலைக்கப்படும் வரை அதன் தலைவராகப் பணியாற்றினார். இக்காலத்தில்  அவர் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

 சுன்னாகம் பட்டின சபை அலுவலகம் தனியார் வீட்டில் இயங்கி வந்தது. அதனை நகர மத்தியில் சபைக்குச் சொந்தமான இருமாடிக் கட்டிடத்துக்கு மாற்றியமைத்த பெருமை இவரைச் சாரும். தனது நண்பரான கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் வரவுசெலவுத் திட்டத்தில் 15 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு கீழே கடைத்தொகுதிகளும் மேலே அலுவலகமும் கொண்ட மாடிக்கட்டிடம் கட்டப்பட்டது. இவ்வாறே அரசியல் தலைவர்களுடனான தனது உறவை சபையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டார். வெளிநாட்டுத் தூதுவரகங்களுடனும் நல்ல தொடர்பினைப் பேணினார். 

சுன்னாகம் சந்தையானது குத்தைகையாளர்களின் பொறுப்பில் இருந்தது. அதனை பட்டினசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மை பயக்கச் செய்தார். அத்துடன் 30 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததுடன் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக சுன்னாகம் பட்டின சபையை மிளிரச் செய்தார்.

தனியார் வீடொன்றில் இயங்கி வந்த சுன்னாகம் பொது நூலகத்தை புதிய கட்டிடம் கட்டி அதில் இயங்கச் செய்ததும் இவரது காலத்தில்தான். மாணவர்களுக்கு அறிவு விருத்தியை ஏற்படுத்தும் நிலையமாக சுன்னாகம் பொது நூலகம் இன்றளவும் நிலைபெற்று நிற்கிறது. அத்துடன் நூலகத்தில் அக்காலத்தில் படிப்பு வட்டம் (Study Circle) ஒன்றும் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம், வைசர் என அழைக்கப்படும் அதிபர் சிவசுப்பிரமணியம், தொழிற்சங்கவாதி இராசசிங்கி முதலானோர் இவ்வட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தனர். பல அறிஞர்களை அழைத்து உரைகளை ஏற்பாடு செய்து அறிவுப் பெருக்கத்துக்கு இவர்கள் வித்திட்டனர்.

இவரது காலத்தில் சுன்னாகம் சந்தியில் இருந்து சுன்னாகம் பொதுநூலகம் வரையான கே.கே.எஸ்.வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டது. அத்துடன் பல வீதிகளைப் புனரமைப்பதிலும், மின்விளக்குகளைப் பொருத்துவதிலும் இவர் முன்னுரிமையளித்துச் செயற்பட்டார்.

சுன்னாகம் பட்டின சபைக்கு தூய்மைத் தொழிலாளர்களை நியமித்து சுன்னாகம் நகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணியதோடு சோலைவரி சேகரிப்பாளர்களை நியமித்து வரிவருமானத்தை ஈட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

இவ்வாறு தனது அறிவாலும், ஆளுமையாலும் சுன்னாகம் பட்டினத்தை சிறப்பான முறையில் கட்டமைத்த செனட்டர் பொ.நாகலிங்கத்துக்கு அவ்வூர் மக்கள் ஒன்றுசேர்ந்து சிலை அமைப்பது அவரது சேவையினையும், அர்ப்பணிப்பினையும் நன்றியுடன் நினைவுகூரும் சிறப்பான செயற்பாடாகும்.

உதயன் 07-06-2025