Wednesday, July 24, 2019

கவிதை -1995 ஏப்ரல் 19ம் முன்னும் பின்னும்



உலகம் பிரமையெனத்
துயின்ற ஒரு பொழுதில்
நாங்கள் விழித்திருந்தோம்.

அகலத் திறந்திருந்த
கண்களைக் குருடாக்க
கற்களும் தூசுகளும் மோதின.

சடுதியெனப்
பள்ளங்களும் வந்து போயின.

எல்லாந் தாண்டி நாம்
நடக்கத் தொடங்குகையில்
பெருங் குரலெடுத்துக் குற்றஞ் சாட்டினர்
ஒரு பக்கமாக நின்று.

எல்லாவற்றையும் உதறிக் கொண்டு
நடக்கிறோம்
இழப்பிடை தோய்ந்து
இருப்பினை நினைந்து
மூடுதலியலாத விழிப்பு நிலையுடன்.

         வெளிச்சம் நான்காவது ஆண்டுச் சிறப்பிதழ் 1995

No comments:

Post a Comment