Wednesday, July 24, 2019

கவிதை -அழைப்பு


கதிரறுத்து அம்மணமான 
வயல்வெளியையும்
காய்ந்து வெடித்த
நீரற்ற ஏரியையும்
சுற்றிச் சுற்றிக் கத்தியலைகின்றன
பறவைகள்.

ஒரு புழுத்தானுமில்லை.
சிறுமீனின் முள்ளுமில்லை.
காற்று வந்து 
அடிக்கடி
தள்ளி விட்டுச் செல்கிறது
தீயின் துண்டுகளை.

பாருங்கள்
அவற்றின் சிறகுகளில்
பொத்தல் விழுந்திருப்பதை.

ஒரு சுனையோ பசுஞ்சோலையோ
அவற்றை வாழ வைக்கும்.

யாராவது முன் வாருங்கள்
பேரிதயம் படைத்தவர்களே!
ஒரு சோலை கட்டி சுனை தோண்ட.

                      வெளிச்சம் மாசி 1996.


No comments:

Post a Comment