Thursday, July 25, 2019

கவிதை -வலையும் அறுப்பும்


நேற்று ஓடிய குளிரோடையில்
நீயும் நானும் சுகித்திருந்தோம்.

இளவெயிலும்
இதமான மென்காற்றும்
ஒரு ஈர்ப்புக்குள் கட்டி வைத்தன நம்மை.

மீன்கள் துடிதுடிக்க
கரையெங்கும் அலை பாய்ந்தோம்.

நீரின் மேல்
கோலமிட்டோம் ஒரு நூறாய்.

சந்தோசங்களெல்லாம்
எங்களுக்கானதாக இருந்த அப்போது
விழி திறந்து பார்த்தாயா
அந்த மோனக் கிறக்கத்திலிருந்து?

கிடுகுவேலிக்குள் புதையுண்டு போன
எங்கள் நினைவுகளையெல்லாம்
ஊடறுத்துப் பரவியது எது, சொல்லு.

கரி படிந்து போன
வாழ்க்கைப் பாதையில் நின்று
ஊமையழுகையிடுவதில் என்ன கண்டாய்?

வியப்பை ஒழி முதலில்.
பாய்தலே நம் கடன்.

                                                               சஞ்சீவி  30-08-1997

No comments:

Post a Comment