ஓட ஓட
வாழ்வின் தூரம் நீள்கிறது.
வெப்பம் சுடரும் தெருக்களில்
நம்பிக்கையை
அழைத்துக் கொண்டு செல்கையில்
தவிக்கிறது வையம்.
குருட்டுப் பேர்வழியாக
அது நோக்குகிறது என்னை.
ஒரு தேவதையைப் போல
சிறகசைத்து வந்து
காலம்
நம் தலை நீவி விடுவதாய்க்
கனவு கண்டேன் இரவுகளில்.
கனவு தொடர்கிறது.
காலமோ
தலை நீவி விடவில்லை இன்னும்.
மரணம் நெருங்கும் கணம் வரை
இக்கனவில் புதைந்திருக்கலாம்
என்வாழ்வு.
சஞ்சீவி 05-07-1997

No comments:
Post a Comment