Wednesday, July 24, 2019

கவிதை -பேய்களின் மரணம்


சூனியக் காரரின் வசியங் கேட்டு
சந்நதம் ஆடின ஏவற் பேய்கள்.

உயிர் கலங்குவதென 
இரைச்சலெழுப்பி அவை வந்து
அகப்பட்டவற்றைப் பிய்த்தெறிந்தன.

குருதியின் கதகதப்பில் 
புனலாடி ஆனந்தப்பட்டன.

மூளியான
வீட்டுக்குள்ளிருந்தெழும் தீயில்
தலையுலர்த்திக் கொண்டன.

ஓலமெழும்,
நரிகளும் காகங்களும்
விருந்துண்ண விழையும் பொழுதுகளில்
சந்நதம் ஓய்ந்து
அவை சென்றன.

***
காலம் உருகி அழிகிறது
வாழ்வே போல்.

அதற்குத் தேவைப்பட்டான் தவமுனிவன்.
ஏவற்பேய்களை விரட்டியடிக்கும்
எறிமாடனும் 
அவசியமாயிருந்தது

***
வீழ்ந்து கிடந்தன ஏவற்பேய்கள்
தமது கர்ம வினைகளை நினைந்தபடி.
இனி 
பேய்கள் பற்றிய பயம் யாருக்குமில்லை.
தவமுனிவரின் தரிசனந்தான்
தேவைப்பட்டது எல்லோருக்கும்.

                 கவிதை 1995 புரட்டாதி ஐப்பசி

No comments:

Post a Comment